தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit  Social bookmarking google      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


மாவை கந்தன் வரலாறு

Go down

மாவை கந்தன் வரலாறு Empty மாவை கந்தன் வரலாறு

Post by Veelratna Sun Nov 11, 2012 5:23 pm


மாவை கந்தன் வரலாறு
மாவை கந்தன் வரலாறு Paper-3


ஈழநாட்டிலே
தமிழர்கள் பல நூற்றாண்டுகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து தங்கள்
ஆதிக்கத்தையும் கலை கலாச்சாரங்களையும் பரவச்செய்த வரலாறுகள்,
சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளன. தென்னிந்தியாவிலிருந்து ஈழநாட்டைக்
கைப்பற்றி ஆண்ட அரசர்களின் வரலாற்றையும் அவர்கள் சமூக, சமய அபிவிருத்திக்கு
ஆற்றிய ஆக்க வேலைகளையும் நோக்கிமிடத்து, அவர்கள் ஈழநாட்டை ஒரு புண்ணிய
பூமியாக ஆக்கவேண்டுமென்ற விருப்பத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது
தெளிவாகின்றது. ஈழநாட்டிலே பல தெய்வீக ஸ்தலங்களை நிர்மாணித்து அவற்றை
நடாத்துவிக்க திரவியமும், நெல்வயல்களும் நிவந்தங்களாக வழங்கிய கதைகளும்
ஏராளமாக உள்ளன. இது போன்ற வரலாற்றுச் சரிதங்களைக் கைலாயமாலை, வையாபாடல்,
யாழ்ப்பாண வைபவமாலை ஆகிய நூல்களிருந்தும் அறியலாம்.
மாவை கந்தன் வரலாறு Paper-2
விஜயன்
ஆட்சிக்கு வரமுன்னரே ஈழநாடு திருந்திய நாடாகவும் இராசரீகமுடைய நாடாகவும்
இருந்ததென்பதற்கு இங்கே குவேனி அரசியாக இருந்தாள் என்பது ஆதாரமாகிறது.
இயக்கர், நாகர் எனும் இருபெரும் இனங்கள் இங்கு வாழ்ந்தன விஜயன் ஆட்சி
ஆரம்பித்ததும் அக்காலத்திற்கு சமய நெறி தவறாது வாழ்ந்த மக்களை மக்களை
வசப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தினால் அவர்களின் சமயாசார ஒழுக்கத்தை
தவறாமற் காத்ததோடு பொதுமக்கள் தாம் தாம் விரும்பியபடி சமய அனுஷ்டானங்களை
நடாத்த வேண்டிய வழிகளையும் வகுத்துக் கொடுத்தான். அதோடு தனது
அரசாட்சிக்குப் பாதுகாப்பாக நான்கு திக்குகளிலும் நான்கு சிவாலயங்களை
எழுப்பினான். கிழக்கு திசையில் தம்பலகாமத்து கோணேசர் கோவிலையும்,
தென்திசையில் மாத்துறை சந்திரசேகரேச்சுரன் கோவிலையும், மேற்குத்திசையில்
திருக்கேதீச்சர சிவாலயத்தையும் வட திசையில் திருத்தம்பலேஸ்வரன் கோவிலையும்
இதற்கு சமீபத்திற் கதிரையாண்டவர் கோவிலையும் கட்டுவித்ததோடு, கோவில்களை
முறையாக நிர்வகிக்கக் காசிப் பிராமணரான நீலகண்டாசாரியரின் மூன்றாங் குமாரன்
வாமதேவாசாரியனையும் அவன் கன்னியாகிய விசாலாட்சி அம்மையையும் அழைப்பித்து
அக்கிரகாரம் முதலிய வேண்டிய பல வசதிகளையும் கொடுத்துதவினான். இவ்விடத்தை
மக்கள் கோவிற் கடவை என வழங்கலாயினர்.
மாவை கந்தன் வரலாறு 09082010296


நகுல முனிவர்


மாவை கந்தன் வரலாறு %E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88


திருத்தம்பலேஸ்வரி
சமேத திருத்தம்பலேஸ்வரன் கோவிலையடுத்து இருடிகள், தபசிகள் பலர் வதிந்து,
உலகம் செழிக்க மேன்மையான செபதங்களை ஆற்றிவந்தனர். அவர்கள் மக்களது
பிணிகளையும் நோய்களையும் போக்கினர். மலையடிவாரங்களிலிருந்து பெருகும்
நீரூற்றுக்கள் தெய்வீகத்தன்மை வாய்ந்தனவாக அமைந்தன மக்களிடையே தோன்றிய
எக்கொடிய நோய்களும் இத் தீர்த்தத்தினாலும் இருஷிகளின் ஜப தப வலிமையாலும்
இறைவனின் வழிபாட்டாலுங் குணமடைந்தன. இதன் காரணமாக நாகதுவீபம்
என்றழைக்கப்பட்ட இந் நாடு மூர்த்தி தல தீர்த்த விசேஷத்தைப் பெற்று
புண்ணியபுரமென வழங்கப்பட்டது. மேரு, இமயம் முதலான மலைச்சாரலிலுள்ள இருஷிகள்
பலர் இங்கு வந்து போனமையால் இத்தல விசேஷம் உலகேங்கும் வியாபித்திருந்தது.
நகுல முனிவர் வருகையின் பின்பே இக்குறிச்சி நகுலேஸ்வரம், கீரிமலை, நகுலாசம்
என்ற பல பெயர்களைப் பெற்றது. நகுல முனிவர் இங்கு வருவதற்கு பூர்வ கன்ம
பாவமொன்றும் அவரைப் பீடித்திருந்தது. இதனை மகாபாரதம் – அஸ்வமேதர்வணி 92
அத்தியாயத்திற் காணமுடிகின்றது.நகுல முனிவரின் பூர்வ வரலாறுஒருகால்
ஜமதக்கினி முனிவர் தமது தந்தையின் சிராத்தத்தைச் செய்வதற்காகத் தங்கள் குல
குருவாகிய பிருகு முனிவரை அழைத்திருந்தார். அம்முனிவரும் அழைப்பை ஏற்றுச்
சிரார்த்த குருவாகவரச் சம்பதித்தார். சிராத்த தினத்தன்று எதிர் பாரதவிதமாக
வியாஸமுனிவரும் ஜமதக்கினியின் ஆச்சிரமத்திற்கு வந்திருந்தார். வியாஸர் உயர்
குருவாக இருந்ததனால் சிராத்த குருவாக யாரை ஏற்பது என்ற குழப்பமான நிலைமை
ஜமதக்கினிக்கு எழுந்தது. இதனால் நாழிகையுங் கழிந்து சிராத்த வைபவங்கள்
தாமதப்பட்டன. இந்தத் தாமதத்தின் விபரமறியப் பிருகு முனிவர் கீரிவடிவாக உரு
வெடுத்து ஜமதக்கினி மனையிற் சென்று அங்குள்ள விபரமனைத்தையும் அறிந்து,
மடைப்பள்ளியுட் புகுந்து பிதிரர்களுக்குரிய காமதேனுவின் பாலை நஞ்சூட்டி,
எச்சிற்படுத்தி, உணவுப் பதார்த்தங்கள்
அலங்கோலப்படுத்தப்பட்டிருப்பதைக்கண்டு கவலைகொண்டார். அழைப்பின் பேரில் வந்த
பிதிரர்கள் ஜமதக்கினி தங்களுக்கு மரியாதையேதுஞ் செய்யாமல் இருத்தலையுஞ்,
தங்களுக்குரிய பால், உணவு எச்சிற்படுத்தப்பட்டிருப்பதையுங் கண்டு கோபமுற்று
அம்முனிவரை நோக்கி “உன் குலம் இனி இல்லாமற் போகக்கடவது” எனச் சபித்துத்
தமது இருப்பிடங்களுக்குச் சென்றனர். மிகுந்த மனக்கவலையோடு முனிவரானவர்
சிராத்த குருவான பிருகு முனிவரிடஞ் சென்ற பொழுது, பிருகுவும் சீற்றங்கொண்டு
தன்னை ஏமாற்றியதற்காகக் “கீரிமுகமுடையவனாய் அலை வாய்” எனச் சபித்தார்.
ஜமதக்கினி மீண்டும் மிகுந்த கவலையுற்று தனது இல்லத்தில் நடந்த வற்றை
விபரமாக எடுத்துரைத்து பிருகு முனிவரிடம் சாபவிமோசன வரத்தை இரந்தார்.
பிருகு முனிவர் இவர் நிலையை உணர்ந்து இரக்கமுற்று இலங்கையின் வடபால்
திருத்தம்பலேச்சுரம் எனும் ஸ்தலம் உண்டு. அதனருகே சமுத்திரக்கரையிற்
கற்பாறைகளிலிருந்து பெருக்கெடுத்தோடிச் சங்கமமாகும் “அந்தர் வாவியில்” (
கீரி மலை தீர்த்தப் பெயர்) மூழ்கிச் சிவபூசை செய்துவரின் நின் சாபம்
விமோசனமமடையும் என இயம்பினார். அவ்வண்ணமே ஜமதக்கினியும் நாகதுவீபத்துத்
திருத்தம்பலேச்சுரம் வந்து தனது நித்ய கர்மானுஷ்டானங்களைக் கிரமமாக
அனுட்டித்தபொழுது பீடித்த பிதிர் சாபமும் குரு சாபமும் நீங்கின.
கீரிமலையின் விசேஷம்
மாவை கந்தன் வரலாறு Keerimalai-Tank01


ஆகவே
“நகுல மகமுடைவாய்” என்ற சாபத்தை ஜமதக்கினி பெற்றதனால் அவரைப் பலர் “நகுல
முனிவர்” என்றும் அழைத்தனர். இச் சாபம் நீங்கபெற்றமை கோவிற்கடவைக்
குறிச்சியில் நிகழ்ந்தமையால் இவ்விடம் நகுலகிரி, நகுலாசலம், நகுலேச்சுரம்
எனும் சிறப்புப் பெயர்களைப் பெற்றது. நகுல முனிவருந் தனக்கேற்ற இடம் இது
தான் என முடிவுசெய்து மலைமுறைஞ்சில் வாசஞ் செய்து திருத்தம்பலேஸ்வரர்
ஆலயத்திலே தங்கியிருந்து வழிபாடு செய்துவந்தார். அதனால் திருத்தம்பலேஸ்வரர்
கோவிலை நகுலேசர் கோவிலென்றும், திருத்தம்பலேஸ்வரியம்மன் கோவிலை
நகுலாம்பிகையம்மன் கோவிலென்றும் பெயரிடப்பட்டு வழங்கி வந்தார்கள்.

( ந+ குலம் என்பது குலமின்மை எனவும் பொருள்படும். கீரி என்ற சொல்லிற்கு “நகுலம்” என்றும் கூறுவர்.)

கீரிமலை
பிதிர்சாபம் மாற்ப்பெற்ற இடமாதலின் இன்றும் சைவசமயிகள் பலர் ஆங்குச்
சென்று அந்தியேட்டி, சிராத்தம் முதலிய பிதிர்க்கடன்களை இயற்றி
வருகிறார்கள். பாரத பூமியிலுள்ள சப்த சிரார்த்த ஸ்தலங்களைப்போல் ஈழநாட்டுச்
சைவ சமயிகளுக்கும் இந்த நகுலேச்சுரம் ஒரு புண்ணிய ஷேத்திரமாக விளங்குவதோடு
ஆடி அமாவாசை, சிவராத்திரி ஆகிய தினங்கள், தீர்த்த மகிமையை உணர்த்தும்
திருநாள்களாக இன்றும் அமைந்துள்ளன.

உக்கிரசிங்கசேனன் வரலாறு

பன்னெடுகாலம்
நகுலமுனிவர் தங்கியிருந்து தமது அனுஸ்டானங்களை ஏனையோருடன் சேர்ந்து
நடாத்திய போது, அனேகர் தீர்த்த யாத்திரையாக இங்குவந்து பிறவித்
துன்பங்களும் பிணி, நோய் மற்றும் ஏனைய துயரங்களும் நீங்கப் பெற்றார்கள்.
சாலிவாகன சகாப்தம் கி.பி 795 ல் விஜயராசனின் சகோதரன் மரபிற் பிறந்த
உக்கிரசிங்கசேனன் வடதிசையிலிருந்து எண்ணற்ற சேனைகளோடு ஈழத்திற்கு வந்து
போர்தொடுத்து அரசாட்சியின் அரைவாசியைப் பிடித்துக்கொண்டு கதிரமலையைத் தனது
இராசதானியாக்கி ஆட்சி நடாத்திவருங்காலை, கோவிற்கடவையிலுள்ள ஆலயங்களின்
விஷேசத்தை கேட்டறிந்து நகுலேசர் கோவிலைத் தரிசிக்க விரும்பிக் கீரிமலைச்
சாரலில் வந்திறங்கி வளவர்கோன்பள்ளம்( வளவுடை) என்னும் இடத்தில்
பாளையமிட்டிருந்தான்.

நகுலமுனிவரது ஆசிகளையும் இவ் வரசன் பெற்றுத்
தனக்குண்டான பல துன்பங்களையும் போக்கினான். இவன் இங்கு தங்கியிருக்குங்காலை
தொண்டைநாட்டரசனான தொண்டைமான் உக்கிரசிங்ககசனனைச் சந்தித்து ஈழத்தில்
வடபகுதியில் விளையும் உப்பிலே தமக்கு வேண்டியளவு விலைக்கு பெறவும் உப்பு
விளையுமிடத்துக்குச் சமீபமாத் தமது மரக்களங்களைக் கொண்டுகோய் உப்பேற்றவும்
உத்தரவுகேட்டு அவ்வுத்தரவையும் பெற்றிருந்தான். மரக்களங்களைக்கொண்டு
செல்லத்தக்கதாக வெட்டப்பட்ட வாய்க்கால் இன்றும் “தொண்டைமானாறு” என
வழங்கப்படுகின்றது. இப்பபடியே உக்கிரசிங்க மகாராஜா அடிக்கடி சுற்றிலா
நடாத்துகையிற் கீரிமலைச் சாரலுக்கும் வருவதுண்டு.
மாருதப்பிரவல்லிமாருதப்பிரவல்லியின்
வருகையின் பின்பே கோவிற்கடவையில் விஜயனால் எழுப்பப்பட்ட கதிரையாண்டவர்
கோவில் பிரசித்தம் அடைந்தது. இக்கோவிலையும் நகுலேசர் கொவிற்
சிவாச்சார்யர்களே அவ்வப்போது நிர்வகித்து வந்தனர். மாருதப்பிரவல்லி குன்ம
நோயும் குஷ்டமும் குதிரை மகத்தையொத்த வடிவினையுங் கொண்டதற்கு வரலாறொன்று
உண்டு.

கலிங்கதேசத்து அரசனொருவனுக்குத் தவத்தாற் பெற்ற பேரழகி
ஒருத்தி “கனகசுந்தரி” எனும் பெயரோடு இருந்தாள். இவள் மூர்த்தி தல தீர்த்த
மகிமைகளை விரும்பியறிந்து தல யாத்திரைகள் செய்தும் புண்ணிய
தீர்த்தங்களாடியும் மூர்த்திகளைப் பூசித்தும் வருவாளாயினாள். செந்தமிழ்
வளர்த்த அகத்தியமுனிவர் வசிக்கும் பொதியமலைச் சாரலிலுள்ள தாம்பிரவர்ணி
நதித்துறையில் ஒரு நாள் நீராடுவதற்காக வந்திருந்தாள் அறங்கே இராகம்,
வெகுளி, காமம், சடம், தீபனம் எனும் பஞ்சாக்கினி காரியங்களையும் நீக்கிப்
பஞ்சபொறிகளையும் அவித்து பஞ்சாக்கினி நடுவினின்று அரிய தவத்தைச் செய்யா
நின்ற அயக்கிரீவ முனிவரைப் பார்த்து இம் மங்கை பரிகசித்து நகைத்தாள் அது
கண்ட முனிவர் சினமேற்கொண்டு, “மங்கையே! நம்மை அவமதித்து நகைத்தனை அதனால் நீ
வரும் ஜனனத்திற்கு பலரும் பார்த்து நகைக்கக் கூடியதான குன்மவலியோடு அஸ்வ
முகத்தைகட கொள்ளுதி; இதுவே உனது நகைப்புக்குப் பிரதிபலனாகும்” எனச்
சபித்தார் சாபத்தால் அதிர்ச்சியுற்ற கனகசுந்தரி மனமுடைந்து முனிவரது
பாதங்களில் வீழ்ந்து வணங்கி “நவபெரும் புவனமும் வந்து தொழ வீற்றிருக்கும்
தசகாரியத்தாபதரே! நுண்ணறிவுடையராய் நூலொடு பழகினும் பெண்ணறிவென்பது பெரும்
பேதைமைத்தே” என்றமை தேவரீர் அறிந்ததேயன்றோ ! அடியேன் புரிந்த குற்றத்தைப்
பொருத்தருளி சாபம் நிங்கும் வழியையருள்க” எனப் பல முறையும் இரந்தாள்.
முனிவரும் இவள் நிலைகண்டு மனமிரங்கி நல்லுபதேசஞ்செய்து “மாடநல்லாய்
கடற்றுறைத் தீர்த்தம் ஆடுங்காற் கந்தப்பெருமான் திருவருளால் உனது சாபம்
விமோசனமடையும்” எனறுரைத்துத் தன் வழி சென்றார்.


“விதித்த சாபத்தைக் கனகசுந் தரியெனு

மெல்லிய றுயரோடுந்

துதித்து நீபகர் கொடுமொழி தவிர்பகற்

சொல்லுதி யெனலோடு

மதித் திருந்தயக் கிரீவனு மவண்முகம்

பார்த்துமா தவனாபி

யுதித்து ளானுக்குப் போந்தலை வருதலை

யுன்னிநோற் றுளன்முன்னம்.”

“புக்கு மச்சன னச்சுமை போயபின்

புவிபோது வறக்காக்கு

முக்கி ரப்பெரு வழுதிபா ருதித்தன

வொளிவனப் புறுமேனி

மிக்க வங்கசுந் தரியெனும் பெயரொடும்

விளங்கினன் பரிபோன்று

தக்க மாமுக மாயினள் வழுதியுஞ்

சஞ்சலித் துடன்சார்ந்தான்.”
-திருச்செந்தூர்ப் புராணம்

பின்னர்
கனகசுந்தரி இறந்து மறுபிறப்பெடுத்து மதுரை மன்னவன் உக்கிரப்
பெருவழுதிக்குப் புத்திரியாகப் பிறந்தாள், மிக்க அங்க அழகுடன் பிறந்த
அப்புத்திரிக்குப் பெற்றோர் “மாருதப்பிரவல்லி” எனவும் “அங்கசுந்தரி” எனவும்
பெயரிட்டு அன்பாக வளர்த்தனர். சிறிது காலஞ்செல்ல முற்பிறப்பில் முனிவரிட்ட
சாபம் கூடுவதற்கு ஆரம்பித்தது. புழுக்கள் வேட்டுவனாகவும், வண்டுகள்
மயிர்க்குட்டிகளாகவும் மாறினாற்போல அங்கசுந்தரியும் காலக்கிரமத்தில் உரு
மாறிக் குன்ம நோயும் குதிரை முகமும் பெற்றமையால் அரசனும் அரசியும் மிகுந்த
வருத்தங் கொண்டு துக்கசாகரத்தில் மூழ்கினர். பல தெய்வங்களை அங்கசுந்தரியின்
விமோசனத்திற்காக வணங்கினர். தம் புத்திரியின் ஷேமத்திற்கா
தானதர்மங்களையுங் கோவில் நிர்மாணங்களையும் அளவுக்கு மிஞ்சி நடாத்தினர் இவ்
வேளையில் ஒரு நாள் தன் மகளது வருத்தத்தை நோக்கித் தாங்கவொண்ணாத்
துயரத்திலிருக்கும் வேளை “நுங்கள் மகள் குதிரை முகமும் குன்மவலியும்
நீங்கப்பெற்று நற்சுகம் பெறவேண்டுமாயின் கடலினும் நதியினும் மூழ்கி
வருவாளாக” என்ற அசரீரி கேட்டது. இதைக் கேட்டதும் மன மகிழ்ச்சியடைந்த
அரசனும் அரசியும் தமது புத்திரியின் தீர்த்தயாத்திரைக்கான ஆயத்தங்களை உடன்
செய்தனர்.
சாந்தலிங்க முனிவரைச் சந்தித்தல்
நோயுற்ற
அங்கசுந்தரி தனது தோழியர்களுடனும் அமைச்சர்களுடனும் பாண்டி நாடு, சோழநாடு,
தொண்டைநாடு, சேரநாடு முதலிய தேயங்களிலுள்ள தீர்த்தங்களிலெல்லாம்
ஆடிவரங்காலை தீர்த்த யாத்திரை செய்துகொண்டு தனது ஆச்சிரமஞ்செல்லும்
சாந்தலிங்க முனிவரைக்கண்டு தரிசித்து தனது தீர்த்த யாத்திரையின் நோக்கங்களை
எடுத்துரைத்தாள். சாந்தலிங்க முனிவரும் இவள் நிலை கண்டு மனமிரங்கி “நீ
இப்பொழுது எடுத்த முயற்சியே உனக்குச் சுகம் தரத்தக்கது. இலங்கையின் வடபால்
நகலேச்சரம் என்ற ஸ்தலம் உண்டு அங்குள்ள மலைச்சாரலிலே சமுத்திரத்தோடு
சங்கமமாகும் உத்தம நன்னீர்த் தீர்த்தம் ஒன்றண்டு அத் தீர்த்தம்
“அந்தர்வாவி” எனப்பெயர்பெறும் அது உலகத்திலுள் சகல தீர்த்தங்களிலும்
விஷேசதன்மை வாய்ந்ததாக இருக்கிறது அங்கு முனிவர்கள் அனேகர் தவஞ்செய்தும்
சமயாச்சார அனுஷ்டானங்களை மேற்கொண்டுமிருக்கின்றனர் அங்கு நீ போய்த்
தீர்த்தமாடிச் சிலகாலந் தங்கியிரந்தாற் சுகமடைவாய். உனக்கு அங்கு நகுல
முனிவர் வேண்டிய உதவிகளை நல்குவார்”. எனக் கூறினார். இது கேட்ட அங்கசுந்தரி
முனிவரது பாதங்களில் விழ்ந்து நமஸ்கரித்து இவ் யாத்திரைகளுக்கான
ஏற்ப்பாடுகளைச் செய்தாள். காவிரிப்பூம் பட்டிணத்திலிருந்து புறப்பட்டு
இந்து சமுத்திரம் என்னும் மகேந்திரக்கடலிற் குளித்து தெற்கே ஏமகூடம் எனப்
பெயர் பெற்ற சுப்பிரமணிய துவாதசாந்தத் தலமாகிய கதிர்காமத்திற்குச் சென்று
மாணிக்ககங்கையிற் தீர்த்தமாடிக் கதிரைவேற்பெருமானை வணங்கி வருவாளாயினாள்.
அங்கேயும் “வடகோடியில் கடற்கரையிற் திவ்விய தீர்த்தமொன்றுளது. ஆங்குச்
சென்று காங்கேயனை அன்புடன் நினைத்து மூழ்குவையேல் நின் எண்ணம் நிறைவுறும்”
என அசரீரி கூறிற்று.
கீரிமலையையடைந்து நகுலமுனிவரைச் சந்தித்தல்அங்கசுந்தரியும்
மகிழ்ச்சியுற்று வடகடற்றுறையடைந்து கீரிமலைச் சாரலில் வந்திறங்கி வளவர்
கோன் (குமாரத்திபள்ளம்) எனும் இடத்திற் பாளயம் போட்டிருந்து தனது விரதத்தை
அனுஷ்டிப்பாளாயினால். இந் நாளிற் பல இருஷிகளுடன் சேர்ந்து தவஞ் செய்து
கொண்டிருந்த நகுலமுனிவரை விசாரித்தறிந்து ஆங்குச் சென்று நகுல முனிவரை
முறைப்படி வணங்கி அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு தனக்குள்ள
வருத்தத்தைச் சொல்வாளாயினாள். இளவரசியின் வருத்தமுற்ற சம்பவங்களைக்
கேள்வியுற்றதும் முனிவர் அவளைப் பத்மாசனத்தில் இருத்ததித் தனது
சிஷ்யையாக்கி “மங்கையே உனக்குத் தெய்வ அருள் கிடைக்கப்பெற்றதால் நீ
இவ்விடத்தை வந்தடைந்தாய் ஆகவே இத்தல மகிமையை யான் கூறுகின்றேன் கேட்பாயாக”
எனக் கூறி கீரிமலையின் வரலாற்றினை கூறினார்.
குதிரைமுகம் நிங்குதல்
மாவை கந்தன் வரலாறு Maruthapuravalli
மிகுந்த
பணிவுடனும் குருபக்தியுடனும் அன்புடனும் இவ் வரலாறுகளைக் கேட்டறிந்த
மாருதப்பிரவல்லி மீண்டும் முனிவரை வணங்கி கூறப்பட்ட மூர்த்திதல தீர்த்த
விசேஷங்களையும் மகிமைகளையும் மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்து சதா
கந்தப்பெருமானது தியானத்திலும் ஈஸ்வர தியானத்திலும் மூழ்கினவளாய் முறையாகச்
சங்கற்பித்துச் தீர்த்தமாடிச் சிவாலயதரிசனஞ் செய்து வருவாளாயினாள். இவள்
தனது தேகம் விகாரப்பட்டிருந்தாற் பிறரறியாதவாறே தீர்த்தமாடப்போக நினைத்து
அவள் தங்கியிருந்த இடமான குமாரத்திபள்ளத்திலிருந்து தீர்த்தக் கரை வரை ஒர்
சுரங்கத்தை வெட்டுவித்து அதன் வழியே சென்று தீர்த்தமாடி வருவாளாயினாள்.
நாட்கள் செல்லச் செல்ல இவளதுமுகம் மாறப்பெற்று நோயும் நீங்கியது.
விகாரமடைந்த அவளது உடம்பு சுகமடைந்து அழகுடன் கூடியயெளவன சொரூபத்தைப்
பெற்றது. நகுலமுனிவரதும் இன்னும் பல இருடிகளினதும் ஆசிகளோடும்
தெய்வத்திருவருளினாலும் சுகமடைந்த மாருதப்பிர வல்லி இவ்விடத்தை
மகாபுண்ணியபுரமாக்க வேண்டும்மெண்றும் நினைத்து அதற்கேற்ற கருமங்களைச்
செய்யமுனைந்தாள். தான் சுகமடைந்துவிட்ட செய்தியையுந் தனது அவாவினையுந் தனது
தாய் தந்தையருக்கும் மற்றுஞ் சுற்றத்தாருக்கும் அறிவித்தாள். இவ் வேளையில்
ஒருநாள் நகுலேசப் பெருமான் கனவிற்றோன்றி “பெண்ணே நீ உனது எண்ணத்தை
நிறைவேற்றவும் எல்லா உயிர்களும் சுகம் பெறவும் கதிரேசன்கோவிலைப் புதிதாக
நிர்மாணி” எனத் திருவருள்பாலித்தார். மிகுந்த மகிழ்ச்சியுற்ற இளவரசி தான்
தினசரி வணங்கி வந்த கதீரேசன் கோவிலைப் புதிதாக நிர்மாணிப்பதற்க்கான
ஆயத்தங்களை உடனேயே செய்ய ஆரம்பித்தாள்.

குதிரை முகமாக
விகாரமடைந்திருந்த இளவரசியின் முகம் மாறப்பெற்ற காரணத்தால்
இவ்விடத்திற்குத் “துரகானன விமோசனபுரி” எனப் பெயரிடப்பட்டது.
அக்காலத்திலிருந்தே இன்றும் இங்கு இக்கோவிலில் அனுஷ்டிக்கப்படும் பூஜை
வழிபாடுகளைக் கொண்ட பத்ததியொன்றில் இவ்விடம் ‘துரகானன விமோசனபுரே’ என்று
குறிப்பிடப்பட்டுள்ளதைக் கீழ்வருஞ் சுலோகங்களால்
அறியலாம்.முற்றிலுஞ்சிற்பாசாரிகள், சிவாச்சாரியர்கள், சேவகர்கள் இன்னும்
மற்றும் வல்லுநர்களையுந் திரவியம், பொண், பொருள் ஆகியவற்றையும்
அனுப்பிவைக்கும்படி இளவரசி தனது தந்தைக்குத் திருமுகம் அனுப்பினால்.,
தெய்வானையம்மன் வள்ளியம்மன் விக்கிரகங்களையமைப்பதற்கு தமது இராஜதானியிலுள்ள
சிற்ப வல்லுநர்களை அழைத்தான் விதிகளுக்கு அமைவானதும் உத்த மோத்தமமான
விஷேசங்களை கொண்டதும் உரிய இலஷணங்களோடுள்ளதுமான விக்கிரங்களை
உருவாக்குவதற்கு ஏற்ப்பாடுகள் செய்தான். உரிய காலத்தில் இவையாவும்
செய்யப்பட்டன., “தொணியேறுவதும் கடல் கடந்து குடியேறுவதும் மகாதோஷமாக எமக்கு
இருக்கையில், அரசன் இப்படிக் கட்டளை பிறப்பிக்கின்றானே யாம் யாது
செய்வோம்” என ஏங்கினர். அதனால் தில்லைச் சிவாலயத்திலேயே பட்டினிகிடந்து
கவலையோடு வாடினார்கள். தமது நித்திய கர்மானுஷ்டானங்களைச் சரிவர நடாத்தியும்
எள்ளளவேனும் தமது சமயாசார ஒழுக்கங்களிற் பிறழாது ஒழுகியும் வருபவர்களான
இத் தில்லை மூவாயிரவரது வருத்தத்தைச் சிவபெருமான் அறிந்தார். அவர் அவ்
மூவாயிரவரது முதல்வரின் கனவிற்றோன்றி “நகுலமலைச் சாரலானது அங்குள்ள புண்ணிய
தீர்த்தத்தினாலும் சிவாலய மகத்துவத்தினாலும் மகாதிவ்யஷேத்திரமாக
விளங்குகின்றது. காசிப் பிராமணர்களும் அங்கு வதிகிறார்கள். முக்கால
ஞானிகளும் தபசிரேட்டர்களும் அங்குள்ளனர். பிராமணர்கள் தங்களது மேலான
நியமநிட்டைகளை வழுமாற் செய்வதற்கு மரக்கலங்களில் இராத்தங்காமல் ஏறலாம்.
நகுல முனிவரும் அவருடன் இன்னும் பல முனிவர்களும் ஆங்கிருக்கையில் அங்கு
போவதையிட்டு யோசிப்பதென்னை? யாதொரு யோசனையுமின்றி ஒருவரை அங்கு அனுப்புதி”
எனப் பணித்தார். இவ்வுத்தரவையறிந்த யாவரும் கவலை தீர்ந்து தீட்சதராகிய
பெரியமனத்துள்ளார் என்பவரை நியமித்து சோழராசனிடம் அனுப்பிவைத்தார்.
சோழராசனும் மகிழ்ச்சியடைந்து தீட்சிதருக்கு வேண்டிய யாவற்றையும் நல்கி,
கந்தசுவாமி, தெய்வானையம்மன், வள்ளியம்மன் விக்கிரகங்களையுந்
தீட்சிதர்கையில் ஒப்புவித்து ஒரு சுபமுகூர்த்தத்திலே மரக்கலத்தினுடாக இங்கு
அனுப்பிவைத்தார்., தீட்சிதரையும் ஏவலாளர்களையும் இன்னும் வேறு பொருள்,
பண்டம், திரவியம் ஆகியவற்றையுங் கொண்டு புறப்பட்ட மரக்கலம் சுபநேரத்திலே
அக் கசாத்துறைக்கு வந்தெய்தியது. இச் சுபசெய்திக்காகத் துறைமுகத்திலே
காத்திருந்த மாருதப்பிரவல்லியும், இருஷிகள் பலரும் மகாஜனங்களும்
மரக்கலத்தைக் கண்டதும் உள்ளம் பூரிப்படைந்தனர். எல்லோரும் ஆனந்தக்கண்ணீர்
ஊற்றெடுக்கத் துதிப்பாடல்களைப் பாடினர். வாத்திய இசைகள் ஒலிக்க “காங்கேயன்”
என்னும் மறுபெயர் கொண்ட கந்தசுவாமி விக்கிரகமும் தெய்வானையம்மன்
வள்ளியம்மன் விக்கிரகங்களும் மரக்கலத்திலிருந்து இறக்கப்பட்டவுடன் ஏனைய
பொருள்களுங் கிரகமாக இறக்கப்பட்டன., திரவியங்கள் யாவுந் தீட்சிதரின்
மேற்பார்வையில் அருக்கேன நிர்மாணிக்கப்பட்ட அக்கிரகாரத்தில் வைக்கப்பட்டன.
இவருக்கு உதவியாக மகாவட்டன் என்ற தளபதியும் ஆலய நிர்மாண வேலைகளை மேற்பார்வை
செய்து வந்தான். சுற்றுமதில்கள், கோபுரங்கள், ஊழியர்களுக்கான விடுதிகள்,
சாலைகள் யாவும் விரைவாகவும் சிறப்பாகவுங் கட்டப்பட்டன., அழகும் யௌவனமும்
மிகுந்தவளாகவும் காணப்பட்ட இவளைக் கண்ண மன்னன் தன்னையே மறந்து இவள்மேற்
காதல் கொண்டான். பின்னர் அரசன் தனது மந்திரிகளினூடாக மாருதப்பிரவல்லியின்
வரலாற்றையறிந்து அவள் நடப்பித்துவரும் ஆலய நிர்மாணங்களையுங் கண்ணுற்று
அவளோடு உரையாட எண்;ணித் தூதர்களை அனுப்பினான். தூதர்கள் மூலம் உக்கிரசேனனை
அறிந்த மாருதப்பிரவல்லி அரசனது நேர்முக உரையாடளுக்கு மறுத்தாள். இதனைத்
தூதர்கள் அரசனிடஞ் சென்று தெரிவித்தனர். எப்படியாவது இவளோடு பேசவேண்டும்
என்ற மனப்பான்மை மேலிடவே, அன்றிரவு சேடியர், காவலர் தூங்குஞ் சமயம்
பார்த்து அவள் உறைமிடத்தையடைந்து உக்கிரசிங்கசேனன். அவளைக் கவர்ந்து
தானிருந்த பாளைத்திற்கு கொண்டு சென்றான்.


“ஸ்ரீமத் காவேர்யாக தஷிணதீரே
ஸமுத்திரஸ்ய பஸ்சிமதடே பாஸ்கரஷேத்ரே
துரகானன விமோசனபுரே அஸ்யதெவ
தேவஸ்ய மஹாவல்லி கஜவல்லி ஸமேத ஸ்ரீ
சுப்பிரமண்ய பரமெஸ்ரஸ்ய….”


துரகானன விமோசன புரே” என வட மொழியில் வழங்கப்பட்ட இவ்விடம் அதே பொருள்பட
“மா-விட்ட-புரம்” எனத் தமிழில் வழங்கலாயிற்று. மாருதப்பிரவல்லியின்
நோன்பின் மகிமையை எங்கும் மக்கள் குதுகலமாக பேசலாயினர். கோவிற்கடவைக்
கதிரேசன் கோவிலைப் புதிதாக நிர்மாணிக்கவேண்டிய ஆலோசனைகள் நடைபெற்றன.கோவில் கட்டுதல்தனது
மகள் தனக்குண்டான பிணிமாறப் பெற்று ஒரு கந்தசுவாமி கோவிலைக் கட்டுவிக்க
முற்ப்பட்ட செய்தியை மதுரைமன்னன் – திசையுக்கிரப் பெருவழுதி – அறிந்தும் மன
மகிழ்ச்சியடைந்து உள்ளப் ப+ரிப்போடு கட்டிடம்மமைக்க வல்ல
சிற்பாசாரியர்களையும் ஏனைய வல்லுனர்களையுந் தேவையான பொருள்களையுந்
திரவியங்களையும் உடனேயே அனுப்பிவைத்தார். ஒரு சுபமுகூர்த்தத்திலே இவையாவும்
மாவிட்டபுரத்திற்கு வந்தடைந்தன. சாஸ்திரவிதியின் பிரகாரம்
அஸ்திவாரமிடப்பட்டு ஆலய நிர்மாண வேலைகளை துரிதமாக நிகழ்ந்தன.

இவ்வாலயத்தின் மூலஸ்தானத்திலே ஸ்தாபிக்கவேண்டிய கந்தசுவாமி

விக்கிரகங்கள் வருதல்

திசையுக்கிர
பெருவழுதி மன்னன் தான் உருவாக்கிய இந்த விக்கிரங்களை இங்கு அனுப்பிவைக்க
விரும்பினான். அவற்றை தாங்கிச் செல்வதற்கும் நித்திய நைமித்தியங்களைப்
பிழையில்லாது சரிவர நடப்பி;தற்கும் தில்லை மூவாயிரவரில் ஒருவரை இங்கு
அனுப்ப எண்ணினான். அதனால் அச் சிவாலயத் தலைவருக்குத் தனது எண்ணத்தை
அறிவித்து உடனே தில்லை மூவாயிரவருள் ஒருவரை அனுப்பிவைக்கும்படி
கட்டளையிட்டான். இதனைக் கேட்ட தில்லை மூவாயிரவர்

ஒருகால் மக்கள்
கூட்டங் கூட்டமாககயாவுக்கு யாத்திரைபோக மரக்கலமேறுமந் துறைமுகமமாக ஒரிடத்தை
இப்பகுதி சமுத்திரக் கரையோரமாக நியமித்திருந்தனர். அதனால் அவ்விடம்
“கயாத்துறை” என வழங்கப்பட்டுக் “கசாத்துறை” என மாறியது.

காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து விக்கிரகங்களையும்

தீட்சிதின்
ஆலோசனைக் கிணங்க இக் காயாத்துறைக்கு – “காங்கேயன்” என்னும் மறுநாமங் கொண்ட
கந்தசுவாமி விக்கிரகம் இங்கு இறக்கப்பட்டமையால் காங்கேயன்துறை என
நாமமிடப்பட்டது. அன்று முதல் இன்றுவரை இத்துறைமுகம் “காங்கேயன்துறை” என்றே
வழங்கிவருகின்றது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்திற் பிரதிஷ்டை செய்யவேண்டிய விக்கிரகங்களும் மற்றும் பொருள்கள்

உக்கிரசிங்கசேனனின் காதல்

இந்நாளில்
உக்கிரசிங்கசேனன் தனது இராச்சிய பரிபாலனத்சை; சுற்றிப்பார்க்க எண்ணி ஒரு
யாத்திரையை மேற்கொண்டபோது நகுலசப் பெருமானைத் தரிசிக்க வந்திருந்தான்.
அங்கு வழமையின்படி நகுலேசப் பெருமானைத் தரிசிக்க வந்திருந்த
மாருதப்பிரவல்லியைக் கண்டான். இராஜ கன்னிகையை யொத்தவளாகவும்
மாருதப்பிரவல்லி பட்டத்தரசியாதல்


மாருதப்பிரவல்லி
இச் செயலைக் கண்டித்து தான் ப+ண்டிருக்கும் விரதம், நடாத்தும் ஆலய நிர்மாண
வேலைகள் ஆகியவற்றை எடுத்துரைத்தாள். அரசனும் இவற்றை உணர்ந்து அவளின்
விருப்பபடியே எதையும் நடாத்தச் சம்மதித்து தனது பாலையத்திலிருந்தே கோவில்
நிர்மாண வேலைகளைச் செய்துவருவதற்கு வேண்டிய ஏற்ப்பாடுகளைச் செய்து
வைத்தான். மறு நாட்காலை தனது எஜமானியைக் காணாது மிகவுந் துயரமும்
பரபரப்பும்மடைந்த காவலர்கள், அமைச்சர்கள் யாவரும் துடிதுடித்து எங்குந்
தெடியுங் காணாது ஈற்றில் உக்கிரசிங்கசேனனின் பாலையத்தில் அரசி இருப்பதை
அறிந்தனர். அங்கு சென்று தங்களது நிலையை எடுத்துரைத்து “நாங்கள் இனி என்ன
செய்யலாம்?” எனக் கேட்க அரசன் “மாருதப்பிரவல்லி என் பட்டப்தரசியாகிவட்டாள்.
இந்தச் சுப செய்தியை உங;கள் மன்னனிடம் உடனே அறிவியுங்கள்” எனக் கூறி
வழிச்செலவிற்கு பொருள்களுங் கொடுத்தனுப்பினான். அவ்வண்ணமே
மாருதப்பிரவல்லியின் சமாச்சாரத்தை தூதுவர்கள் அவள் தந்தை
திசையுக்கிரப்பெருவழுதியிடம் அறிவித்தனர். மன்னன் உடனே மந்திராலோசனை
நடாத்தி மனமகிழ்ந்து உள்ளப்பூரிப்போடு உக்கிரசிங்க சேனன் மாருதப்பிரவல்லி
யின் விவாகத்தை அங்கீகரித்தான். இக் கோவிலின் திருப்பணி வேலைகள்
பூர்த்தியான பின்புதான் தமது விவாகத்தை நடாத்தவேண்டுமென்ற இளவரசியின்
பிடிவாதத்தின் காரணமாக உக்கிரசிங்கசேனன் தனது தலைநகருக்குச் செல்லாது இத்
திருப்பணி வேலைகளைத் துரிதமாக முடிப்பதற்கான கடமைகளில் ஈடுபட்டான். இதனால்
திருப்பணிகள் வெகுசீக்கிரம் முடிவடைந்தன. ஆனிமாத உத்திரநச்சத்திரத்தன்று
எல்லா மூர்த்திகளுக்குங் கும்பாபிஷேகஞ் செய்துவைக்கப்பட்டது. இதைத்
தொடர்ந்து இருபைத்தைந்துநாள் மகோற்சவங்களும் நடைபெற்றன. மாருதப்பிரவல்லி
ஆடி அமாவசைத் தீர்த்தம் ஈறாகவுள்ள எல்லா உற்சவங்களையும் தரிசித்து ஆலய
நிர்வாகஞ் செவ்வேன நடைபெற்று வர வேண்டிய ஒழுங்குகளைச் செய்துவைத்துத்
தீட்சிதரிடம் யாவற்றையும் பொறுப்பளித்து அவரிடமும் நகுலமுனிவர்pடமும்
மற்றும் ஏனையோரிடமும் விடைபெற்றுக் கொண்டு முக்கிய பிரமுகர்கள் புடைசூழ
உக்கிரசிங்கசேனனுடன் கதிரமலைக்கு ஏகினால்.

அரசகுமாரி தனது
கண்காணிப்பிற் கட்டுவித்துக் கும்பாபிஷேகஞ் செய்து வைத்தமைபற்றி நகுலகிரிப்
புராணத்திற் பின்வருமாறு வர்ணிக்கப்பட்ருக்கின்றது:

“நீள்பெருங் கோயிலு நிகரில் கோபுரஞ்
சூழ்தரு நெடுமதில் சுடர்கள் கான்றுறத்
தாழ்வகன் றிடுமறு கோடுந் தந்துநன்
நாளினிற் கந்தவேள் தனை நயப்புடன்.”

“செப்பருங் கும்பதா பனங்கள் செய்திடா
தொப்பிலா மறைமுறை யொளிரு நல்லருள்
வைப்பினா வாகன பதிட்டை தன்னைமுன்
தப்பிலாக் குமரவேள் தனக்குச் செய்தனன்.”

உக்கிரசிங்கசேனராஜனுக்கும்
மாருதப்பிரவல்லிக்கும் கதிரமலையிற் சோழ அரச பரம்பரை மரபிற்கமைவாக வெகு
உற்சாகத்தோடும் விமர்சையாகவும் திருமணம் நடந்தேறியது. சிலகாலஞ் சென்றபின்
மாருதப்பிரவல்லி தலயாத்திரை செய்துவரும்போது கோணேச கிரிக்குச் சென்று
தீர்த்தமாடிச் கோணேசரைத் தரிசித்து அங்குள்ள பூசகர்க்குப் பட்டாடையும்
பொன்னும் மணியும் வழங்கி அவர்களது ஆசிகளையும் பெற்றனள். இப்படியிப்படியே
எங்னெங்கு சென்றாளோ அங்கெல்லாந் தானதர்மங்கள் இயற்றி ஆலயங்களைக்
கட்டுவித்து மீண்டும் நகுலகிரிக்கு வந்து நெடுங்காலமாக மாவிட்டபுரம்
கந்தசுவாமியாரை வணங்கி நல்லருள் பெற்றுக்கொண்டு கதிரைமலைக்கே நிரந்தரமாக
வாசஞ் செய்யும் நோக்கத்தோடு புறப்பட்டாள்.

நன்றி – க.து.ஷண்முகநாதக் குருக்கள்


Veelratna
Veelratna

பதிவுகள் : 42
சேர்ந்தது : 10/11/2012
வசிப்பிடம் : மனசு
நான் இருக்கும் நிலை (My Mood) : நான் நலமா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க ?


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum