தமிழ் எழுதி
Alt+n அல்லது இதை(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறதுby tamilparks Fri Sep 25, 2015 4:58 pm
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm
» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm
» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm
» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm
» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm
» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm
» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm
» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm
» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm
» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am
» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am
» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am
» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm
» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm
» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm
» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm
» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm
» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm
» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm
» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm
Social bookmarking
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

கணவன் அலறல்: கொலையுண்ட மனைவி, ஆவியாக வந்து மிரட்டல்!!
தேன் தமிழ் :: செய்திக் காற்று :: நிஜம்
Page 1 of 1

கருமத்தம்பட்டி : "எனது முதல்மனைவியை 10 ஆண்டுகளுக்கு முன் கோவில் கிணற் றில் தள்ளி கொலை செய்துவிட் டேன்; அவள் இப்போது எனது கனவில் வந்து மிரட்டுகிறாள்' எனக் கூறி, கருமத்தம்பட்டி போலீசில் சரணடைந்த நபர், அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கோவில் கிணறு மூடப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டதால், பிரேதத்தை எவ்வாறு மீட்டு புலன்விசாரணை நடத்துவது, எனத்தெரியாமல் திக்குமுக்காடி வருகின்றனர், போலீசார்.
திருநெல்வேலி மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த சோலை என்பவரது மகன் அழகர்சாமி (35). கருமத்தம் பட்டி அடுத்த பொன்னாண்டாம்பாளையம் தனியார் மில்லில் முன்பு பணியாற்றி வந்தார். அங்கு, உடன் பணியாற்றிய அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுடன் அழகர்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறியாத அழகர்சாமியின் பெற்றோர், சிவகாசியைச் சேர்ந்த அமுதாவை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பின் அமுதா, கணவர் வேலை செய்யும் அதே மில்லில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது, தனது கணவருக்கு, மற்றொரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்து கண்டித்தார். மனைவியை தீர்த்துக் கட்ட முடிவு செய்த அழகர்சாமி, கடந்த 2000, ஏப்., 24ல் தனது மனைவி அமுதாவை சென்னியாண்டவர் கோவிலுக்கு அழைத்துச் சென் றார். அங்கு சாமி கும்பிட்ட பின், கோவிலின் வெளிப்புறம் இருந்த 150 அடி ஆழ கிணற்றை அமுதாவுக்கு காட்டிய அழகர்சாமி, "இந்த கிணற்றுக் குள் அதிசய லிங்கம் உள்ளது. அதைக்கும்பிட்டால் மிகவும் நல்லது' என கூறியுள்ளார்.
இதை நம்பிய அமுதா, கிணற்றுக் குள் எட்டிப்பார்த்த போது, அவர் கால்களைப் பிடித்து தூக்கிய அழகர்சாமி கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்தார். பின் வீட்டுக்கு வந்த அவர், "அமுதாவைக் காணவில்லை' என, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அதன்படியே உறவினர்களையும் நம்ப வைத்தார். அதன் பின் அழகர்சாமி, தனது காதலியிடம், அமுதாவைக் கொலை செய் ததை கூறி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள் ளார். அதிர்ச்சியடைந்த காதலி "கட்டிய மனைவியைக் கொலை செய்தவனை நம்பி எப்படி வாழ்க்கை நடத்துவேன்' எனக்கூறி, அழகர்சாமியை வெறுத் தார். இதனால் விரக்தியடைந்த அழகர்சாமி, வேலை செய்யும் மில்லில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன் றார்; மில் நிர்வாகம் வேலை நீக்கம் செய்து, விரட்டிவிட்டது. சிறிது நாட்களுக்கு பின் தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டார். அதன் பின், முத்துலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டு விருதுநகர், செவல்பட்டியில் ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு கனகராஜன்(4), செல்வஈஸ்வரி ( ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் தனது பெற்றோரை சந்தித்த அழகர்சாமி, "நான் கிணற்றில் தள்ளி கொலை செய்த முதல் மனைவி அமுதா ஆவியாக எனது கனவில் வந்து பயமுறுத்துகிறாள். கொலை செய்ததை ஒப்புக் கொண்டு ஒழுக்கமாக போலீசில் சரணடைந்துவிடு என மிரட்டுகிறாள்' என்று தெரிவித்துள்ளார். பயந்துபோன பெற்றோர், "அவள் கூறியபடி செய்துவிடு' என, தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கருமத்தம்பட்டி போலீசில் சரணடைந்த அழகர்சாமி, அமுதாவை கொலை செய்த விஷயத்தை வாக்குமூலமாக அளித்தார். திடுக்கிட்ட போலீசார் வழக்கு விசாரணையை தீவிரப்
படுத்தியுள்ளனர்.
அமுதாவை 1999ம் ஆண்டில் திருமணம் செய்த அழகர்சாமி, 2000ம் ஆண்டில் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். அமுதாவை தள்ளி கொலை செய்த கோவில் கிணறு, கடந்த 2005ல் வாஸ்து சரியில்லை என்று கூறி மூடப்பட்டுள்ளது. மேலும், கோவிலில் திருப்பணிகள் செய்து கிணறு இருந்த இடமே தெரியாத வகையில் மட்டம் செய்யப் பட்டுள்ளது.
அழகர்சாமி தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், கொலை செய்யப்பட்ட அமுதாவின் உடலை எப்படி கண்டுபிடித்து மீட்பது, பிரேத பரிசோதனை நடத்தி கொலையை எவ்வாறு உறுதிப்படுத்துவது, வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் ஆதாரங்களை எப்படி சமர்ப்பித்து எனத்தெரியாமல் போலீசார் திக்குமுக்காடி வருகின்றனர். இக்கொலை சம்பவம், போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

கிருஷ்ணன்- Admin
- பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) :
Similar topics
» வீட்ல தனியா இருந்தப்ப ஒரு ஆள் வந்து...
» மனைவி. . .
» தனது மனைவி உட்பட பல பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது
» மனைவி. . .
» தனது மனைவி உட்பட பல பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது
தேன் தமிழ் :: செய்திக் காற்று :: நிஜம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum