தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


கவர்னர் முடிவை எதிர்த்து கர்நாடகாவில் பந்த் : பஸ்கள் எரிப்பு, கடைகள் அடைப்பால் பதட்டம்

Go down

கவர்னர் முடிவை எதிர்த்து கர்நாடகாவில் பந்த் : பஸ்கள் எரிப்பு, கடைகள் அடைப்பால் பதட்டம் Empty கவர்னர் முடிவை எதிர்த்து கர்நாடகாவில் பந்த் : பஸ்கள் எரிப்பு, கடைகள் அடைப்பால் பதட்டம்

Post by mdramesh Sun Jan 23, 2011 12:48 pm

பெங்களூரு : கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதியளித்த, கவர்னர் பரத்வாஜை கண்டித்து பா.ஜ.,வினர் நடத்திய போராட்டம், வன்முறையாக மாறியது. பல இடங்களில் கவர்னரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது, பஸ்கள் கொளுத்தப்பட்டன; நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டன. இதனால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

நில மோசடி புகார் தொடர்பாக, முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடருவதற்கு அனுமதி கேட்டு, ஷிமோகாவைச் சேர்ந்த ஜஸ்டிஸ் போரத்தின் வக்கீல்கள் பால்ராஜ், சிராஜின் பாஷா ஆகியோர், கடந்த டிச., 28ம் தேதி, கவர்னர் பரத்வாஜிடம் மனு கொடுத்தனர்.பெங்களூரில் பா.ஜ., தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் போதே, கவர்னர் பரத்வாஜ், முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதியளித்தார். இதனால், பா.ஜ., தலைவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்த நகல் தனக்கு கிடைக்கவில்லை என்றும், மீடியாக்கள் மூலம் தான் தெரிந்து கொண்டேன் என்றும் முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார். இதனால், கர்நாடகாவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பா.ஜ.,வினர் வன்முறையில் இறங்கலாம் என, தகவல்கள் வெளியாயின.

நேற்றிரவிலிருந்து ராஜ்பவன் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவிலிருந்தே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.,வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பகுதிகளில் நடுரோட்டில் டயர்களை போட்டு கொளுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கர்நாடகாவில், 22ம் தேதி பந்த் நடத்தப்படும் என்று பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா நேற்று முன்தினம் நள்ளிரவு அறிவித்தார். நேற்று அதிகாலையிலிருந்தே பா.ஜ.,வினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பா.ஜ., பலம் வாய்ந்த பகுதிகளில் போராட்டம் கடுமையாக இருந்தது.

சட்டம் ஒழுங்கு ஏ.ஜி.டி.பி., இன்பான்ட் கூறுகையில், ""தாவணகரே மாவட்டம், ஹொன்னாளியில் இரண்டு அரசு பஸ்களும், பெங்களூரில் தனியார் பஸ் ஒன்றும் தீ வைத்து கொளுத்தப்பட்டன,'' என்றார்.

ஆனால், 25க்கும் மேற்பட்ட பஸ்கள் கொளுத்தப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சங்கர் பிதரி கூறுகையில், "பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில், 48 மணி நேரம், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகர ஆயுதப் படையினர், மாநில ஆயுதப் படையினர் உட்பட பாதுகாப்பு பிரிவு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதட்டமான பகுதிகளில் விழிப்புடன் செயல்படுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

இந்நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் பா.ஜ.,வினர் நடத்திய போராட்டம், வன்முறையாக மாறியது. பெங்களூரு உட்பட சில பகுதிகளில் பஸ்கள், தீ வைத்து கொளுத்தப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சினிமா தியேட்டர்கள், வங்கிகள் இயங்கவில்லை. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதிகாலையில் இயக்கப்பட்ட சில பஸ்கள் மீது கல் வீசப்பட்டதால், பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பல பகுதிகளில் பஸ்கள் உடனடியாக டிப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டன. காலை 10 மணிக்கு மேல், எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் கடுமையாக திணறினர்.

சிக்மகளூரு பகுதியில், ம.ஜ.த., தலைவர் போஜே கவுடா, தன் கடையை திறக்க முற்பட்ட போது, சிலர் அவர் மீது கல் வீசியதால் படுகாயமடைந்தார். மைசூரு கே.ஆர்.சர்க்கிளில், கவர்னரின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட, பா.ஜ., எம்.எல்.ஏ., சங்கரலிங்கே கவுடா, மூடியிருந்த கடைகளை திறக்குமாறும், அவரது மகன் கடைகளை மூடுமாறும் கூறியதால், பரபரப்பு நிலவியது.ஹாவேரி பகுதியில் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. ஹாசன், தும்கூர், தாவணகரே, சிக்மகளூரு என மாநிலம் முழுவதும் பா.ஜ., போராட்டத்தால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. மங்களூரிலும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெங்களூரில் கவர்னரை கண்டித்து, கவர்னர் மாளிகையை நோக்கி சட்ட அமைச்சர் சுரேஷ்குமார் உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் ஊர்வலமாக சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
avatar
mdramesh

பதிவுகள் : 26
சேர்ந்தது : 09/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum