தமிழ் எழுதி
Alt+n அல்லது இதை(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறதுby tamilparks Fri Sep 25, 2015 4:58 pm
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm
» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm
» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm
» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm
» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm
» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm
» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm
» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm
» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm
» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am
» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am
» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am
» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm
» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm
» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm
» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm
» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm
» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm
» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm
» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm
Social bookmarking
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

போக்குவரத்து போலீசிற்கு புதிய தொழில்நுட்பம்: முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்.
Page 1 of 1

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும்,"இ-சலான்' மற்றும்"போர்ட்டபிள் சோலார் சிக்னல்' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.
சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரையும், திருட்டு வாகனங்களை எளிதில் கண்டுபிடிக்கும் விதமாகவும்,"இ-சலான்' எனும் மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தை, போக்குவரத்து போலீஸ் அறிமுகப்படுத்தியது. கடந்த ஒரு மாதமாக, பரீட்சார்த்த அடிப்படையில் இருந்த இத்திட்டம் நேற்று முழுமையாக அமல்படுத்தப்பட்டது. அதே போல், போக்குவரத்து சிக்னல் பழுதான இடங்கள், அதிக வாகன போக்குவரத்து இருந்தும் சிக்னல் பொருத்த முடியாத இடங்கள், வி.ஐ.பி.,க்கள் போக்குவரத்தின் போது பயன்படுத்தத்தக்க வகையில், எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட," போர்ட்டபிள் சோலார் சிக்னல்' அமைப்பும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவை இரண்டையும், சென்னை அண்ணா சாலை போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
"இ-சலான்' திட்டத்தின்படி, 2 கோடியே 83 லட்ச ரூபாய் செலவில் 300 கையடக்க ரசீது வழங்கும் கருவி வாங்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை, அண்ணா நகர், செம்பியம், கோயம்பேடு, பூக்கடை, வடக்கு கடற்கரை போக்குவரத்து இன்ஸ்பெக்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, இந்த கையடக்க கருவிகளை வழங்கினார். மேலும், அரியானாவில் நடந்த அகில இந்திய காவல்துறை தடகள போட்டிகளில், 10 ஆயிரம் மற்றும் 5,000 மீட்டர் போட்டிகளில் தங்கம் வென்ற எஸ்.ஐ., ரகுநாத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், ஆயுதப்படை பெண் போலீஸ் தமிழரசிக்கு 30 ஆயிரம் ரூபாயும், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் வீரமணி, கமாண்டோ படை பெண் போலீஸ் பாப்பாத்திக்கு தலா 40 ஆயிரம் ரூபாயும், சிறப்பு காவல்படை முதுநிலை போலீஸ் முகேஷ் மற்றும் ஆயுதப்படை பெண் போலீஸ் கிருஷ்ணரேகாவிற்கு தலா 20 ஆயிரம் ரூபாயும் ரொக்கப் பரிசாக வழங்கிய முதல்வர் ஜெயலலிதா, அவர்களை பாராட்டினார். அண்ணா சாலை போலீஸ் நிலையத்திற்குள் சென்ற முதல்வர், அங்கு அனைத்து மகளிர் போலீஸ் அறையை பார்வையிட்டார். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரிடம், நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார். பின், சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அறைக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில், போலீசுக்கு அறிவுரைகள் வழங்கும் விதமாக சில வாசகங்கள் எழுதிவிட்டு, புறப்பட்டுச் சென்றார்.
விழாவில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்டவர்களும், உள்துறை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, டி.ஜி.பி., ராமானுஜம், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., ராஜேந்திரன், சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., சேகர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி மற்றும் கூடுதல் டி.ஜி.பி.,க்கள் அர்ச்சனாராமசுந்தரம், ராஜேந்திரன், தமிழ்ச்செல்வன், லல்லாம் சங்கா, முத்துக்கருப்பன், ஸ்ரீ லட்சுமி பிரசாத், சென்னை மாநகர கூடுதல் கமிஷனர்கள் சஞ்சய் அரோரா, தாமரைக்கண்ணன், அபய் குமார் சிங், எம்.எல்.ஏ., வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
"அரசு அதிகாரத்தின் சின்னம் போலீஸ்': "இ-சலான்' மற்றும்"சோலார் சிக்னல்' துவக்க விழா முடிந்த பின், அண்ணா சாலை போலீஸ் நிலையத்தை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, இன்ஸ்பெக்டர் அறையில், பார்வையாளர் குறிப்பேட்டில் எழுதியதாவது: சென்னை போலீசில்,"இ-சலான்' திட்டம் மற்றும்"போர்ட்டபிள் சிக்னல்' திட்டத்தை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நிர்வாகத்தில், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தொழில்நுட்பம், சென்னை போலீஸ் சிறந்த முறையில் போக்குவரத்து விதிமுறைகளை நீண்ட நாட்களுக்கு அமல்படுத்துவதற்கான தொடக்கமாக அமையும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதைப் பொறுத்தே, இதன் பலன் இருக்கும். சட்டத்தை அமலாக்குபவர்களான போலீசார், கடுமையாக உழைத்து, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், திறம்பட சேவை புரிய வேண்டும். அரசு அதிகாரத்தின் வெளிப்படையான சின்னம் போலீஸ். எனவே, உங்களது முன்னுரிமை, பொதுமக்களை மனிதாபிமானத்துடன் அணுகுவதுடன் சட்டம் - ஒழுங்கை காப்பதில் இருக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா எழுதியுள்ளார்.

கிருஷ்ணன்- Admin
- பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) :
Similar topics
» காஸ் சிலிண்டர் விலையில் ரூ.15 குறைப்பு: "வாட்' வரியை நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா
» இந்தியஉளவுத்துறைக்கு புதிய அதிகாரி நியமனம்????
» இவர் தான் அடுத்த முதல்வர்...!
» புதிய அறிமுகம்_anbumsivam
» புதிய அறிமுகம்_madhumadhu

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|