தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


ஆடுகளம் - சிறப்பு விமர்சனம்

Go down

ஆடுகளம் - சிறப்பு விமர்சனம்   Empty ஆடுகளம் - சிறப்பு விமர்சனம்

Post by priyakutty Thu Jan 20, 2011 6:11 pm




ஆடுகளம் - சிறப்பு விமர்சனம்


மிழ்
சினிமாவுக்கு மீண்டும் ஒரு மதுரை வாசம். அது என்னமோ என்ன மாயமோ தெரியல...
மதுரையை மையமாக வைத்து எடுக்கிற படம் எல்லாம் வரிசையாக ஹிட். அந்த
வகையில் ஆடுகளம் இன்னொரு ஹிட். தனுஷுக்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு
நெத்தியடி அடிக்கிற மாதிரி ஒரு படம். பொல்லாதவனுக்குப் பிறகு தெளிவான ஆய்வுகளோடு ஆடுகளத்தில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.



ஆடுகளம் - சிறப்பு விமர்சனம்   Adugalamin


சேவல்
சண்டையில் பேட்டைக்காரன் (ஜெயபாலன்) சேவல்கள் தோற்றதாக சரித்திரமே இல்லை.
சேவல்களை வளர்ப்பதிலும் வித்தைகளை கற்றுத் தருவதிலும் வல்லவன் பேட்டைக்காரன்.
இவரிடம் இருக்கும் பசங்களில் இவர் நம்புவது ரெண்டே பேர்தான், ஒருவன்
கருப்பு (தனுஷ்) இன்னொருவன் துரை (கிஷோர்). ஆனால் பேட்டைக்காரன் சேவலை
எப்படியாவது தோற்கடித்து விட
வேண்டும் என்கிற லட்சியம் ரத்னசாமிக்கு. ரத்னசாமி (நரேன்) போலிசாக
இருந்தாலும் சேவல் சண்டையில் வெற்றி பெறுவதில்தான் தன் மானமே அடங்கி இருக்குன்னு நினைக்கிறவர்.



சேவல்
சண்டைகளில் கருப்பு வளர்க்கும் சேவல் சக்கைபோடு போடுது. எந்த சேவலாக
இருந்தாலும் சரி... கருப்போட சேவல் அதை வென்றுவிடுகிறது. இன்னொரு பேட்டைக்காரன்
என்று பெயர் வாங்கி விடுகிறான் கருப்பு. இங்க தான் பிரச்சனையே... கருப்பு
வளர்வது பேட்டைக்காரனுக்குப் பிடிக்காமல் போக. கருப்பின் கதையை முடிக்க
பிளான் போடுகிறார். இல்லாத சங்கதிகளை இருப்பதாக சொல்லி துரைக்கும்
கருப்புக்கும் சண்டை மூட்டி விடுகிறார். கடைசியில் ஆறுதலான க்ளைமாக்ஸ்!



இதுல
எங்க இருந்து ஹீரோயின் வந்தாங்க என்று கேட்கிறீங்களா? ஹீரோயின்
இல்லைன்னாலும் கதை இருக்கும். இருந்தாலும் தமிழ் படத்துல ஹீரோயின்
இல்லாமலா? ஆனாலும் அந்த வேலையையும் ரொம்ப எதார்த்தமா செய்திருக்கிறார் வெற்றிமாறன். ‘ஐரின்’ கதாபாத்திரத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக டப்சி. ஒரு வித்யாசமான ஹீரோயின்.



அழுக்கு
லுங்கி கசங்கின சட்டையோடு தனுஷ் ஒரு துடிப்பான தோற்றம். தமிழும்
இங்கிலீஷும் கலந்தா மாதிரி மதுரை நகர பாஷை பேசும் போது தனுஷை வெற்றிமாறன்
எவ்வளவு வேலை வாங்கி இருக்காருன்னு தெரியுது. எழுத்தாளர் ஜெயபாலன் நூறு
படத்துல நடித்தவர் மாதிரி அப்படி ஒரு நடிப்பு. கிஷோர், பல படங்களில் கலக்கியவர்.
இதிலும் அளவான நடிப்பு. அவருக்கு இயக்குனர் சமுத்திரக்கனி பின்னணி குரல்
கொடுத்திருப்பது கூடுதல் பலம். புதுமுக ஹீரோயின் டப்சி, பெப்சி மாதிரி ரொம்ப கூல்.



படத்தின்
முதல் பாதி சர சர வேகம். இரண்டாவது பாதியில் ஒரு வேகத்தடை போட்ட மாதிரி
கொஞ்சம் செண்டிமெண்ட் காட்சிகள். ஒரே அடிதடின்னு இருந்தா எப்படி? பெண்களுக்காக
சில காட்சிகள் வேண்டாமா... அதுவே ஓவர் செண்டிமெண்டாக இல்லாமல்
இருந்தவரைக்கும் நல்லது. காரணம் இல்லாத கதாப் பாத்திரங்கள் தேவை இல்லாத காட்சிகள், இவை எல்லாம் ஓரம் கட்டி விட்டு கதைக்கு எது தேவையோ அதை செய்திருக்கிறார் வெற்றிமாறன்.



ஜி.வி.பிரகாஷின்
பாடல்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் சாயல் இல்லாமல் இல்லை. சினேகனின்
வரிகளில் 'வெள்ளாவியில் வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா, உன்ன வெயிலுக்கு
காட்டாமல் வளர்த்தாய்ங்களா...' ரசிகர்களின் சரமாரியான கைதட்டல்களோடு 'யாத்தே யாத்தே' பாடல் பட்டையை கிளப்புகிறது.



கிராபிக்ஸில் காட்டப்படும் சேவல் சண்டைகளிலும் ஹீரோயிசத்துக்கான சஸ்பென்ஸ் தக்க வைத்திருப்பது சபாஷ். சன் பிக்சர்ஸ், தரமான படம் என்று தைரியமாக சொல்லிக் கொள்ளலாம். வெற்றிமாறனின் இன்னொரு வெற்றி!


வெற்றிக்களத்தில் 'ஆடுகளம்'


avatar
priyakutty

பதிவுகள் : 62
சேர்ந்தது : 16/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum