தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு!

Go down

விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு! Empty விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு!

Post by கிருஷ்ணன் Sat Sep 11, 2010 5:22 pm

எப்படி வந்தது யானை முகம் ?

விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான். கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.

தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.

யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத்தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது. விநாயகருக்கு, சுமுகர் என்ற பெயருண்டு. ச என்றால் மேலான அல்லது ஆனந்தமான என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார். விநாயகர் சதுர்த்தி நன்னாளில், ஓம் கணேசாய நம என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.

பெண் உருவ பிள்ளையார்

பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையார் கணேசினி என்றும், கஜானனி என்றும் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர், பெண்ணுருக் கொண்டு இருகரங்களில் அபய, வரத முத்திரைகளைக் கொண்டு நிற்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுவாமி சன்னதி நுழைவு வாயிலின் வலது பக்க தூணில் கணேசினியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால் வியாக்ரபாத கணேசினி என அழைக்கப்படுகிறார்.

பிள்ளையார் சுழி தேவதைகள்!

பிள்ளையார் சுழியில் உள்ள அகரத்திற்குப் பிரம்மன், உகரத்திற்குத் திருமால், மகரத்திற்கு ருத்திரன், பிந்துவிற்கு மகேசன், நாதத்திற்குச் சிவன் என்று குறிப்பிடுகின்றனர். எனவே, ஐந்து தெய்வ வணக்கமே பிள்ளையார் சுழி என்பர்.

விநாயகரும், சர்ப்பமும்!

விநாயகர் உதரவந்தம் பாம்பு. அணி பாம்பு, பூணூல் பாம்பு எனத் தம் உடலில் சர்ப்ப அணிகலன் கொண்டுள்ளார். பிள்ளையார்பட்டியில் லிங்கமும் பாம்பும், திருப்பரங்குன்றத்தில் கரும்பும், பவானியில் வீணையும், மானாமதுரையில் சங்கும், சங்கரன்கோவிலில் பாம்பாட்டிச் சித்தர் பீடத்தில் நாகத்தையும் கையில் கொண்டுள்ளார். தேனியில் அமிர்த கலசம் ஏந்தி காட்சியளிக்கிறார்.

பிள்ளையார் பிரார்த்தனை பலன்கள்!

மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும்.உப்பால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிவர்.கல்லால் அமைந்த விநாயகரை வழிபட, சகல பாக்கியங்களும் பெறலாம்.

விநாயகர் - சில தகவல்கள்!

தமிழ்நாட்டில் முதன் முதலாக தங்கத் தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர் கோவை ஈச்சனாரிப் பிள்ளையார். இங்குள்ள தேர், ஏழரை கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது.

இழந்த பதவிகளை மீண்டும் பெற...

சிலருக்கு தொழிலில் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்; சிலருக்கு பதவி இழப்பு ஏற்பட்டிருக்கலாம்; சிலருக்கு சொத்து இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இவர்கள், நடனமாடும் தோற்றத்தில் இருக்கும் நர்த்தன விநாயகரை அணுகி, அவருக்கு அபிஷேகம் செய்து, இனிப்பு நைவேத்யம் செய்து, வழிபட்டு வந்தால், இழந்தவைகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

வியப்பூட்டும் விநாயகர்!

வித்தியாசமான விநாயகர்: கை - தொழில், கும்பம் ஏந்திய கை - ஆக்கும் தொழில், மோதகம் ஏந்திய கை - காக்கும் தொழில், அங்குசம் ஏந்திய கை - அழிக்கும் தொழில், பாசம் ஏந்திய கை -மறைத்தல் தொழில். விநாயகருக்கு விருப்பமான நிவேதனம்: மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், தேன், கல்கண்டு, சர்க்கரை, தினை மாவு, பாகு, அதிரசம் முதலியன. பன்னிரெண்டு விநாயகர்: வக்ரதுண்டர், சிந்தாமணி, கணபதி, கஜானை கணபதி, விக்ன கணபதி, மதுரேச கணபதி, துண்டு கணபதி, வல்லப கணபதி, தூப கணபதி, கணேசர், மதோத்கட கணபதி, ஹேரம்ப கணபதி, விநாயகர். விநாயகர் என்ற சொல்லுக்கு சிறந்த தலைவர் என்று பொருள். வி - சிறந்த, நாயகர் - தலைவர். விநாயகரை உருவாக்க: கருங்கல், சலவைக்கல், பளிங்குக்கல், சுத்தி, வெள்ளை எருக்குவேர், பஞ்சலோகம், வெள்ளி, செம்பு, பொன், தந்தம், மஞ்சள், சந்தனம், சர்க்கரை, பசுஞ்சாணம், முத்து, பவளம், மண், விருட்ச மரங்கள் முதலியன.

கணபதியின் 16 வடிவங்கள்

விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதால் மாறுபட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும்.

1. பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.

2. தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால
ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை
வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.

3. பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நன்கு அமையும்.

4. வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

5. சக்தி கணபதி: பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

6. துவிஜ கணபதி: இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.

7. சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.

8. உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.

9. விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற
மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.

10. க்ஷிப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

11. ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விள
ங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள்.

12. லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

13. மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

14. புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.

15. நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில்நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

16. ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

ஐங்கரன்- பெயர்க்காரணம்

இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால் ஐங்கரன் என்று பெயர் பெற்றார். நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது. விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.

ஊத்துக்குளி நர்த்தன விநாயகர்

விநாயகரது, நர்த்தனக் கோலம் (நடனமாடுவது) மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இப்படி ஒரு அபூர்வ கோலத்தை திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் காணலாம். இக்கோயிலிலுள்ள விநாயகர் தனது வாகனமான மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனால் நர்த்தன விநாயகர் என்றழைக்கப்படுகிறார். விநாயகர் சன்னதி முன் மூஞ்சூறு இருப்பது வழக்கம். ஆனால் ஊத்துக்குளி பெரியநாயகி கைலாசநாதர் கோயிலிலுள்ள விநாயகர் மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது விசேஷமாகும்.

பிள்ளை மனம் கொண்டவர் வெள்ளை குணம் உடையவர்

விநாயகருக்குப் பலவிதமான பெயர்கள் வழங்கப்படுகின்றன. அப்பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு.

கணபதி பூதகணங்களுக்கெல்லாம் தலைவன்
விக்னேஸ்வரன் தடை அனைத்தையும் போக்குபவர்
லம்போதரன் தொந்தி உடையவர்
ஐங்கரன் ஐந்து திருக்கரங்களைக் கொண்டவர்
வக்ரதுண்டன் வளைந்த துதிக்கை பெற்றவர்
பிள்ளையார் குழந்தைபோல் வெள்ளைமனம் கொண்டவர்
ஒற்றைக்கொம்பன் ஒரு கொம்பு உடையவர்
ஹேரம்பர் திக்கற்றவர்களுக்கு உதவுபவர்
விநாயகர் மேலான தலைவர்
தந்திமுகன் தந்தத்தை பெற்றவர்

தந்தையைப் போல் பிள்ளை

தாயைப் போல பிள்ளை என்பது தான் உலக வழக்கு. ஆனால், தன் தந்தை சிவபெருமானின் தோற்றத்தை விநாயகப்பெருமான் ஒத்திருப்பார். இருவரும் வேறு வேறு அல்லர். சிவபெருமானின் மற்றொரு வடிவமே விநாயகப்பெருமான் என்பர்.

1) சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்
2) சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள்
3) இருவருக்கும் மூன்று கண்கள்
4) தலையில் இருவரும் மூன்றாம் பிறையணிந்திருப்பர்
5) இருவரும் பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பர்
6) தந்தையைப் போல இவரும் ஐந்தொழில்களைச் செய்வர்
7) இருவரும் நடனக்கோலத்தில் காட்சி தருவர்(நடராஜர், நர்த்தன கணபதி)
Cool பார்வதி சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், வல்லபை விநாயகரின் இடப்பக்கம் இருப்பாள்.

எலி மீது யானை அமர்ந்தது எப்படி?

யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம். இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.
கிருஷ்ணன்
கிருஷ்ணன்
Admin
Admin

பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) : நான் நலமா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க ?


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum