தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


புறக்கணிப்பு கற்றுத் தரும் பாடம்

Go down

புறக்கணிப்பு கற்றுத் தரும் பாடம் Empty புறக்கணிப்பு கற்றுத் தரும் பாடம்

Post by arsiyaas on Sun Mar 25, 2012 5:39 pm

எஸ்.அர்ஷியா

பக்ருதீன் கான் உடைந்து அழுதபடி தன் மகன் கலீல் சமாதியின் மீது சரிந்து குமுறுகிறார். அவர் கண்கள் கண்ணீரைக் கொட்டுகின்றன. அவர் வாய் இறைஞ்சுகிறது. "எங்களிடம் எதுவுமில்லை. எங்களுக்கென்று சொந்த நிலமும் இல்லை. எனக்கு மூன்று மகன்கள். ஒருவன் டில்லியிலும் மற்றொருவன் முசோரியிலும் அவர்களுக்கான வயிற்றுப்பாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் கள். கலீல் மட்டுமே எனக்கு ஆதரவாக இருந்தான்". வானத்தைப் பார்த்துக் கையேந்தும் அவர், மத்திய பாதுகாப்புப் படையில் சிப்பாயாகப் பணியாற்றிய தன் மகனைச் சுட்டுக்கொன்ற மாவோ யிஸ்ட்களையோ அவர்களது கொள்கையையோ எதிர்த்துப் பேசுபவராக இல்லை. ஏனென்றால், "எது நடந்தாலும் அது கடவுளால் முன்னமே எழுதப்பட்டது" என்று இறுகிப் போகிறார்.
தொலைக்காட்சியில் ஓடிய செய்தியைப்பார்த்து பதறி ஓடிவந்த பக்கத்துவீட்டு ஆள்தான், பக்ருதீன் கானை போஜ்பூர் காவல் நிலையத்துக்குப் போய் விசாரிக்கச் செய்திருக்கிறார். கலீலுக்கு மனைவியும் மூன்றுவயதிலும் ஒருவயதிலுமாக இரண்டு குழந்தைகள். மகன் துப்பாக்கிக் குண்டு களால் கொல்லப்பட்டுவிட்டது உறுதியாகிப்போனபின் சொல்கிறார். "கலீல் அடிக்கடி சொல்வான். தண்டேவாடேவுக்குப்போய் உயிரோட திரும்பி வந்துட்டோம்ன்னா, அது அதிர்ஷ்டம்ன்னு!" என்று.
கலீலுக்கு அதிர்ஷ்டமில்லை. கலீலுடன் மாவோயிஸ்ட் தோட்டாக்களுக்குப் பலியான மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 76 பேரில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 43 பேர். அவர்களில் உதய் வீர் சிங்கின் மனைவி அஜ்மித் கவுரும் நரேந்திர குமாரின் தந்தை ஸ்ரீதன் சிங்கும் சுசில் குமாரின் தாயார் யசோதா தேவியும்கூட இதுபோலத்தான் சொல்கிறார்கள்.
கடவுள் என்பது அல்லாஹ்வாகவோ, ராமராகவோ, சிவனாகவோகூட இருக்கலாம். தண்டேவாடே சம்பவம், பலியானவர்கள் குடும்பங்களைப் பொறுத்தவரை 'அது கடவுளால் முன்னமே எழுதப்பட் டது'தான். ஆனால் இங்கே சாவுகளை முன்னமே எழுதியது, ஆளும் அரசுகளைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய காட்டுச்செடியை விருட்சமாக வளரவிட்டு, பின்பு வெட்டிச் சாய்க்க முயலும் கண்கெட்ட பிறகான சூரிய நமஸ்காரப் பாடத்தை இந்தியாவுக்குக் கற்றுத் தந்திருக்கிறது ஏப்ரல் -6, 2010 தண்டேவாடே சம்பவம்.


எல்லோரும் ஒருமித்தக் கருத்துடன் செயல்பட எத்தனையோ நல்ல விஷயங்கள் காத்துக் கிடக் கின்றன. அவற்றையெல்லாம் யாரும் ஒன்றுகூடி தேர் இழுப்பதில்லை. இங்கே ராஜினாமா செய்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆளாளுக்கு உச்சிமோந்து, இருக்கையோடு கட்டி வைக்கின்றனர். '26/11 சம்பவத்துக்குப் பிறகு உள்துறை அமைச்சராக ஆன ப.சிதம்பரம் உள்நாட்டுப் பாதுகாப்பு நிர்வாகத்தில் புதிய அணுகுமுறைகளை கையாண்டு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார். அதற்கு நல்ல பலன் இருக்கிறது. இந்நிலையில் அவரது ராஜினாமா ஏற்பு என்பதற்கு இடமே இல்லை. பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மூத்த அமைச்சரை இழக்க மாட்டார்கள். கட்சி, அவர் மீது அத்தனை நம்பிக்கை வைத் திருக்கிறது' என்று மன்மோகன்சிங், சோனியா காந்திஆகியோரின் வாயாகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்வி அவருக்கு கிரீடம் சூட்டி உலகுக்கு அறிவிப்பு செய்கிறார். அவரது புதிய அணுகுமுறைகள் என்ன மாதிரியான பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு தண்டேவாடே நல்ல உதாரணம் என்பதை வசதியாக மறந்துவிட்டார்.
எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி,'மத்திய உள்துறை அமைச்சராகத் தொடர ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல... அத்தனை எதிர்க்கட்சிகளும் ஆதரவு தருகின்றன. அமைச்சவையிலிருந்து சிதம்பரம் வெளியேறுவதை நாங்கள் ஏற்க மாட்டோம். அவர் இந்த சூழலை தைரியமாக எதிர்கொள்வார் என்று எதிர்பார்க் கிறோம். மாவோயிஸ்டுகளிடம் நாடு தோற்றுநிற்பதை எங்களால் பார்க்க முடியாது' என்று, 'படட்டும்... இன்னும் நல்லா படட்டும்' எனும் உள்ளர்த்தத்துடன் கொம்பு சீவிவிடுவது, ப.சிதம்ப ரமே எதிர்பார்க்காததுதான்.
சம்பவத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்பு, மேற்கு வங்க மாநில சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை கடுமையாகச் சாடி,"buck should stop at the Chief Minister's table" என்று அங்கலாய்த்த சிதம்பரம் மீது, 'இது அரசியல்வாதிகளின் மொழியாக இல்லை' என்று கோபப்பட்டிருந்தார் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா. அவரே இன்று, 'யாரையும் குறை சொல்வதற்கான நேரம் இதுவல்ல. அனைவரும் இணைந்து செயல்படுவதற்கான நேரம் இதுதான். நாம் ஒருமித்து செயல்படுவோம்' என்று ஆதரவு தந்திருப்பதும் எதிர்பாராததுதான்.
அத்தனையும் ஒன்றுகூடி வருகிறது. அந்த வகையில் ப.சிதம்பரம் நடத்திய ராஜினாமா ஓரங்க நாடகம், சிறப்பாகவே அமைந்துவிட்டது.
ஆனால், தேசிய நெடுஞ்சாலை எண்:221லுள்ள சிந்தல்நர் எனும் கிராமத்தைச் சேர்ந்த தர்மேந் திரா சிங், 'காட்டுக்குள் ஏதோ நடக்கப்போகிறது என்று எங்களுக்குப் புரிந்திருந்தது. பலத்த அமைதி இருந்தது. ஆனால் அது இத்தனைப் பெரிய சம்பவமாக இருக்கும் என்று நினைக்க வில்லை. திடீரென்று காலையில் மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது. இது கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட ஆபத்தான பகுதி. அதிகமான விளைவை ஏற்படுத்தும் வெடிகள் பூமிக்குள் இன்னும் அகற்றப்படாமல் இருக்கின்றன' என்கிறார்.
சாதாரண கிராமத்தானுக்குத் தெரிந்திருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தின் நிலை குறித்த சூட்சுமம் கூட `Operation Green Hunt` திட்டத்தை, குளிரூட்டப்பட்ட பாதுகாப்பான நவீன அறைக்குள் உட்கார்ந்து, 'அப்படி... ம்... வெரிகுட்... அப்புறம் இப்படி...'என்று வியூகம் வகுத்துக் கொடுத்த உள்துறை அமைச்சருக்கு/அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. காகிதத் திட்ட வியூகங்களுக்கும் குறிப்பிடப்பட்ட அந்த களத்தில் செயல்படுத்தும் நிலவரத்திற் கேற்ற உத்திமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும் என்பதை அதிகாரிகள் எடுத்துச் சொல் வதில்லை. அல்லது தெரியாததுபோல இருந்துவிடுகிறார்கள். அல்லது யார் மீதாவது பழியைப் போட்டுவிடுகிறார்கள்.
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூர் மகாராணி மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் காவல் துறை அதிகாரி அமான் சிங் சொல்வது பூடகம் ஏதுமில்லாமல் நேரடியாகவே இருக்கிறது. 'கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி அதேஇடத்தில் மாவோயிஸ்ட்டுகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினார் கள். அந்த சம்பவத்தில் நான் ஒருவன் மட்டும்தான் காயத்துடன் தப்பியவன். மற்ற எல்லோரும் உயிரிழந்து விட்டார்கள். அந்த சம்பவத்தின்போது பெரிய அளவு எண்ணிக்கையில் மாவோயிஸ்ட் டுகள் இருக்கவில்லை. சிலர்தான் இருந்தனர். எனக்கு முழங்காலுக்குப் பக்கத்தில் குண்டு பாய்ந்தது. அதற்கு முந்திய மாதத்திலும் அதேஇடத்தில் தாக்குதல் சம்பவம் நடந்தது. அப்போதும் எங்கள் சகாக்கள் பலியானார்கள். கடந்த இரண்டு மாதத்தில் இது மூன்றாவது தாக்குதல். மார்ச் 1 ஆம் தேதி, அருகிலுள்ள டார்மெட்லா கிராமத்தில் இதுபோன்றதொரு தாக்குதலை நடத்தினார் கள். ஆனால் 6 ஆம் தேதி தாக்குதல் ஒட்டுமொத்தமாய் அத்தனை பேரையும் சாய்த்துவிட்டது' என்று 76 பேர் பலியான கதைக்கு முன்னோட்டம் கொடுக்கிறார்.
சம்பவம் நடந்து முடிந்தவுடன் துணை ராணுவப் படையில் எந்தப் பிரிவினர் மாவோயிஸ்ட்டுகள் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளை விடுவிக்கக் கிளம்பினார்கள் என்ற முறையான பதிவுகள்கூட முகாம்களில் இல்லை என்ற தகவல் இப்போது நெஞ்சை பதைக்க வைப்பதாக இருக்கிறது. முதலிரண்டு நாட்கள் தெளிவானத் தகவல்கள் ஏதும் இல்லை. மூன்றாவது நாளில்தான் 62 வது பட்டாலியனின் ஆல்பா கம்பெனியும் ஜீ கம்பெனியின் ஒருபகுதியினரும் தண்டேவாடே மாவட் டத்தின் முக்ரானா காடுகளில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள் என்ற தகவலே கிடைக்கிறது. அதற்கு முன்பு அவர்கள் ரோந்துப் பணிக்குச் சென்றதாகத்தான் தகவல் வந்திருந்தது. ஏப்ரல் 4 ஆம் தேதி கிளம்பிய அவர்கள் தொடர்ந்து இரண்டு இரவுகள் மூன்று பகல்கள் பணியில் இருந்திருக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகளின் பிடியிலிருக்கும் பகுதிகளில் அமைக்கப்படும் இந்த சாலைகளில் போக்குவரத்து நடந்தால் `Operation Green Hunt` திட்டத்துக்கு உதவியாக இருக்கும் என்று ஒருபகுதிப் பணியாக இதை மேற்கொண்டிருக்கிறார் கள்.
முக்ரானா கிராமத்தில், அவர்கள் தொடர் பணியினால் களைத்தும் போய்விட்டனர். அதனால் அன்றுடன் பணியை முடித்துவிட்டு முகாமுக்குத் திரும்ப இருப்பதாக அவ்வூர் மக்களிடம் பேச்சோடு பேச்சாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த கிராம மக்களில் யாரோ ஒருவர் மாவோயிஸ்ட் டுகளுக்குத் தகவல் தரும் தகவலாளியாக இருந்திருக்கிறார்.
சம்பவம் நடந்தேறிவிட்டது. 76 பேர் பலியாகியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்த ஆயுதங்கள் அத்தனையையும் மாவோயிஸ்ட்டுகள் பொறுக்கி எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். ஒரு தோட்டாவைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அதேவேளையில், அவர்களில் ஒருவருக்குக் கூட காயம் ஏற்படவில்லை எனும்போது எந்த அளவுக்கு துணை ராணுவத்தினர் களைத்துப்போய் அல்லது அசட்டையாக அல்லது வியூகமற்று இருந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.
உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளை 76 பேர் உயிரிழந்ததை எளிதான வார்த்தைகளில், 'தவறு நடந்துவிட்டது' என்று குறிப்பிடுகிறார்.


வாக்கு வங்கியையும் அதிகார ருசியையும் கண்டுவிட்ட சுதந்திரத்துக்குப் பின்பான அரசுகள், அதற்கு முன்பான பிரிட்டிஷ் அரசைப்போலவே ஆதிவாசி பழங்குடி மக்களிடம் நடந்து வருகின் றன. இந்திய வரைபடத்தை ஓரளவுக்கு வகைப்படுத்திய அவர்கள், நிலப்பகுதிகளில் வசூல் முறைக்குத் தோதாக சிட்டா, அடங்கல், பட்டா என்று காகித முறைகளை அறிமுகப்படுத்தினர். அதன்படி நிலப்பகுதி மக்கள் அடித்துப் பிடித்தோ, ஏதாவது கொடுத்தோ நிலத்தை தங்கள் பெயருக்குப் பதிவு செய்து கொண்டு விட்டார்கள். 'நாங்க தாமிரப் பட்டா வெச்சுருக்கோமாக்கும்' என்று சொல்வது ஒருவகையில் அதன் தொடர்ச்சிதான். அதை ஆதிவாசி பழங்குடி மக்கள் வாங்கி வைக்கவில்லை. வாங்கி வைக்கவேண்டும் என்று அவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வில்லை. பிரிட்டிஷ் அரசு செய்த தவறுகளில் ஆதிவாசி பழங்குடி மக்கள் புறக்கணிப்பும் ஒன்று!
அதைத்தான் இன்றைய சுதந்திர(?)அரசுகளும் செய்துவருகின்றன. சுதந்திரமடைந்த நாளிலிருந்தே சுதந்திரமடைந்து விட்டதாக சொல்லப்பட்ட பள்ளு, பறைய, பழங்குடி மக்களுக்கு புறக்கணிப்பைத் தவிர வேறுஎதையும் எந்த அரசும் செய்து கொடுக்கவில்லை. அவர்கள் வசிக்கும் உள்ளடங்கிய கிராமங்கள், மலைப்பகுதிகள் அடிப்படை வசதிகள்கூட இல்லாது நசிந்து கிடக்கின் றன.
குறிப்பாக தமிழ்நாட்டில், மதுரைக்குப் பக்கத்திலுள்ள நத்தம் அருகே மலையூர் என்றொரு முகடு இருக்கிறது. அங்கே ஏறத்தாழ முந்நூறு குடும்பங்கள் வசிக்கின்றன. தரையிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் (உயரத்தில்?) இருக்கிறது, அக்கிராமம். நத்தத்தில் மெட்ரிகுலேசன் பள்ளி/ கல்லூரிகள் இருக்கின்றன. அம்மலைக் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளிக்கூட இல்லை. நத்தத் தில் ரிலையன்ஸ் பிரஷ் இருக்கிறது. அம்மலைக் கிராமத்தில் ரேஷன் கடைகூட கிடையாது. நத்தத்தில் பளபளக்கும் நெடுஞ்சாலை இருக்கிறது. அம்மலைக் கிராமத்திற்கு தரையிலிருந்து நடந்துசெல்ல ஒற்றையடிப் பாதைகூட கிடையாது. அங்கேயும் மக்கள் வாழ்கிறார்கள். மதுரைக்குப் பக்கத்திலேயே இப்படி பல கிடையாதுகளுடன் மக்கள் வாழ்கிறார்களென்றால்... அடர்காடுகளும் நீளமலைகளும் நீண்ட தூரத்துக்கு வெறிச்சிட்டுக்கிடக்கும் பொட்டல்வெளிகளும்நிறைந்த மிகவும் அத்துவானமான இந்தியாவின் 26 ஆவது மாநிலமான சத்தீஸ்கரில் என்ன இருந்துவிடப் போகிறது? அங்கே வசிக்கும் ஆதிவாசி, பழங்குடியினருக்கு யார் என்ன செய்துதர முன் வருவார் கள்? அவர்களுக்கு சிட்டா, அடங்கல், பட்டா என்றால் என்னவென்று சொல்லித்தர யார் இருக் கிறார்கள்?
சத்தீஸ்கர் மாநிலம் வெளியிட்டிருக்கும் அரசு வலைத்தளக் குறிப்பில் தண்டேவாடாவுக்கான போக்குவரத்துக் குறிப்பைப் பார்த்துவிடுவது நல்லது. அப்போதுதான் குளிரூட்டப்பட்ட பாதுகாப் பான நவீன அறைக்குள் உட்கார்ந்தபடி, வகுத்துக்கொடுக்கும் காகிதத் திட்ட வியூகங்கள் என்ன வாகின்றன என்பது புரிபடும். தண்டேவாடாவுக்கு அருகிலுள்ள நகரம் ஜக்தல்பூர். தேசிய நெடுஞ்சாலை 9 -ல் அமைந்திருக்கும் இதன் வழியாக சத்தீஸ்கரின் பெருநகரங்களான ராய்ப்பூர், பிளாஸ்பூர், துர்க், ராஜ்நாத்காவோன், பைலாதிலா ஆகிய ஊர்களுக்கு எம்பிஎஸ்ஆர்டிசி தொடர் சேவையை வழங்குகிறது. இதனைத்தவிர்த்து, தனியார் சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகின் றன. தண்டேவாடாவிலிருந்து ஹைதராபாத்துக்கு ஆந்திர மாநிலப் பேருந்து வந்துபோகிறது. தண்டேவாடாவிலிருந்து மேற்சொன்ன ஊர்களில் ஜக்தல்பூர் 87 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இதுதான் அருகிலுள்ள ஊராகும். மற்றவை முறையே 383 கிலோ மீட்டரிலிருந்து 560 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவை.
அப்படியான அடர்வனத்துக்குள்தான் தேசத்தின் 20 சதவீத கனிமவளம் புதைந்து கிடக்கிறது. தேசத்தின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பிலாய் உருக்கு ஆலை இங்கேதான் இருக்கிறது. துர்க், ராய்ப்பூர் ஆகிய இடங்களில் பெரிய சிமெண்ட் ஆலைகளும் மற்ற இடங்களில் சிறிதும் பெரிதுமான அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அலுமினிய உற்பத்தி ஆலைகளும்கூட இங்கே இருக்கின் றன.
இப்படியாகப்பட்ட நிலையில் இந்தியா, தாராளமயமாக்கலுக்கு தன் கதவுகளை
விரித்துத் திறந்து வைத்தது. அதன்படி இந்தியாவின் வளத்தைச் சுரண்ட அயல்நாட்டு நிறுவனங்களும் அவர் களுக்குச் சுரண்டிக் கொடுக்க உள்நாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு மாநிலமாக இடம் தேடத் துவங்கின. கனிம வளம் கொட்டிக் கிடக்கும் சத்தீஸ்கருக்கு பல நிறுவனங்கள் படையெடுத்தன. அவற்றுள் சத்தீஸ்கர் மாநில அரசு டாடா மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி 74 ஆயிரத்து 836 ஏக்கர் நிலத்தை அந்நிறுவனங்களுக்கு மாநில அரசு கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆனால் இதுவரை 5 சதவீத இடம்தான் அரசால் கையகப்படுத்த முடிந்துள்ளது. இதுபோலான ஒப்பந்தங்களை ஜார்க்கண்ட் அரசும் மேற்கு வங்கமும்கூட அந்தந்த மாநிலங்களில் போட்டுக் கொண்டுள்ளன.
ஒப்பந்தப்படி மீதி இடத்தை கையகப்படுத்த கனிம வளம் நிறைந்த அடர்வனப் பகுதிகளையும் காடுகளையும் அழித்து, அங்கு வசிக்கும் முரியாஸ், துர்வாஸ், ஹல்பிஸ் ஆகிய ஆதிவாசி பழங்குடி மக்களை விரட்டியடிக்கின்றது அரசு. காலகாலமாக மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்த ஆதிவாசி பழங்குடிகளுக்கு இது புதிதாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது. 'எங்கள் இடம். எங்கள் பூமி. எங்கள் சாமி. இப்போது இதைவிட்டுப் போகச்சொன்னால் நாங்கள் எங்கே போவோம்?' என்று கேட்கிறார்கள்.
அவர்களின் கேள்விகளுக்கு அரசு அதிகாரிகளிடம் பதிலில்லை. மாறாக கோபம் கொள்கின்றனர். 'உங்க இடம்ன்னா சிட்டா, அடங்கல், பட்டா எங்கே?' என்று கேட்கின்றனர். அதற்கு அவர்கள் எங்கே போவார்கள்? கை விரிக்கிறார்கள். 'அது இல்லாட்டி இடத்தைக் காலிபண்ணு' என்று பூர்வீகக் குடிகளை கழுத்தில் கை வைத்து அதிகாரத்துடன் நெட்டித் தள்ளுகின்றனர்.
அப்போதுதான் மாவோயிஸ்ட்டுகள் 'நாங்க இருக்கோம்!' என்று அவர்களின் ஆபத்பாந்தவர் களாக(?) வருகின்றனர்.
அது சரி, அவர்கள் யார்?
1967 ஆம் ஆண்டு. மேற்கு வங்க மாநிலத்திலுள்ள நக்சல்பாரி என்ற கிராமத்தில் நடந்த விவசாயிகள் எழுச்சிக்கு பின்புலமாக ஒருசிலர் இருந்தார்கள். அப்போது அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்கிலிருந்து மாறுபட்டக் கருத்தைக் கொண்டு விலகி வந்திருந்தார்கள். விவசாய எழுச்சியின் வேகம் அங்குள்ள நிலமற்ற விவசாயிகள், சமூக அமைப்பின் மீது கோபம் கொண்ட இளைஞர்களை படைசேர்க்கப் போதுமானதாக இருந்தது. படித்த, பொறியியல் துறையில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு அந்த இயக்கத்தின் மீது ஆர்வமாக இணைந்தனர். நக்சலைட்டு என்று அவர்கள் பெயரிட்டு அழைக்கப்பட்டனர். அரசு நடவடிக்கை களில் அதிருப்தி கொண்டிருந்த அவர்கள், அரசு நிர்வாகம் புகாத இடங்களில்/அரசு புறக்கணித்து விட்ட வனப்பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை வலுவாக்கிக் கொண்டார்கள்.
ஆங்காங்கே இந்தக் குழுக்கள் தனித்துச் செயல்பட்டன. அவர்களுக்குள் கருத்து மோதல்களும் உருவாயின. அதன் விளைவாக அவர்களுக்குள் தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றன. அது அரசுக்கு தலைவலியாக உருவானது. அப்போது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகளால் குழுக் களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதான தோற்றம் உருவானது. காலக்கிரமத்தில் அவர்கள் ஒன்றிணைந்து 'மாவோயிஸ்டுகள்' ஆனது, சமீபத்தில்தான்!
ஆதிவாசி பழங்குடியின மக்களையே திரட்டி வலுவானதோர் படையையும் கைப்பற்றப்பட்ட/அரசு ஆயுதக்கிடங்குகளில், காவல்நிலையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட/ துணை ராணுவத்தினரைக் கொன்றபின்பு பொறுக்கி எடுத்த ஆயுதங்களும் அதன் மூலம் அப்பகுதிகளில் கிடைத்திருக்கும் 'துப்பாக்கி முனையின் வழியே கசியும் அதிகார' ருசியும் மாவோயிஸ்ட்டுகளை 'நிகர்நிலை அரசாள்வோராக' நினைக்க வைத்திருக்கிறது. அதைத்தான் பிரதமர் மன்மோகன் சிங், 'நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் உள்நாட்டு அபாயம்' என்று சொன்னது.
அவர் சொன்னதுபோல 'சிவப்பு அபாயப் பகுதியான' சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரா ஆகிய இடங்களில் அதிக அளவிலும், உத்தர்காண்ட், ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் குறைந்த அளவிலுமாக மாவோயிஸ்ட்டுகள் இருக்கின்றனர். எதற்காக இந்தக் குழுக்கள் உருவாயினவோ அதிலிருந்து விலகி, பழங்குடி ஆதிவாசிகளையே 'பிற நாடுகளின் போர்க் குழுக்கள் கடைப்பிடித்த வீட்டுக்கு ஒருவர் பாணி'யில் கட்டாயப்படுத்தி கேடயங்களாக்கிக் கொண்டு, அவர்களிடமே வரிவிதித்து கட்டாய வசூல் செய்தும், ஒப்பந்தக்காரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் தண்டல் போட்டும், அரசு மேம்பாட்டு நிதியைக் கைப்பற்றியும், கருவூலங்கள் வங்கிகளைக் கொள்ளையடித் தும் தங்களையும் குழுவின் செயல்பாடுகளையும் மேம்படுத்திக் கொள்கின்றனர். அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பெரும் பண முதலைகள் ஆகியோரைக் கடத்திச் சென்று பேரம்பேசி ராபின்ஹூட் பாணியில் பணம் பிடுங்குவதும் வாடிக்கையான செய்திகள். இதுவே ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளைத் தாண்டுவதாகச் சொல்கிறார்கள். அதன் மூலம் வீட்டுக்கு இவ்வளவு என்று பணம் கொடுத்து ஆள்திரட்டி தங்கள் படை(?)பலத்தை வலுப்படுத்திக் கொள்கின்றனர். ஆயுதங்களை சீனா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வாங்குகின்றனர். ராணுவம் வைத்திருக்கும் நவீன ஆயுதங்களைக் காட்டிலும் மாவோயிஸ்ட்டுகளிடம் அதிநவீன ஆயுதங்கள் இருப்பதை சம்பவங்களின் மூலம் அறிய முடிகிறது.
அதேவேளையில் ஆதிவாசி பழங்குடியினருக்கு அரசுகளால் ஏற்படும் நிர்பந்தங்களின்போது, சமூகப் பிரச்சனைகள் ஏற்படும்போது துணையாக(!) இருக்கின்றனர். தேவைக்கு அதிகமாக வைத்துக் கொண்டிருப்போரிடமிருந்து உபரிநிலங்களைக் கைப்பற்றி இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது, விவசாயக்கூலியை அதிகமாகப் பெற்றுத்தருவது, நில உடமையாளர்களிடமிருந்து கொத்தடிமைகளை மீட்பது, அரசு அதிகாரிகளின் ஆதிவாசி பழங்குடியினர் மீதான மிரட்டலை ஒடுக்குவது போன்ற நல்ல(?) காரியங்களும்கூட அவர்களால் செய்யப்படுவது உண்டு.
அரசுகளின் வளமான கொள்கைகள், திட்டங்கள் இப்பகுதிகளுக்கு கிடைக்கப் பெறாமலிருப்பதும், அப்படிக் கிடைக்கும் பட்சத்தில் அதைக் கிடைக்கச் செய்யாமலிருப்பதும் என இரட்டை முகங்களு டன் மாவோயிஸ்ட்டுகள் செயல்பட, அரசு நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடின்மை, ஒப்புக்கு செயல்படுதல் ஆகியவை முக்கியக் காரணமாக இருக்கின்றன.
64 ஆவது முறையாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிவிட்ட பின்பும் புறக்கணிப்பு தொடர்வதால் மாவோயிஸ்ட்டுகளின் வளர்ச்சி அரசின் கணக்குப் படியே 16 மாநிலங்களில்... 220 மாவட்டங் களில் பரவிக் கிடக்கிறது. சர்வதேச விதிகளின்படி ஒருலட்சம் மக்களுக்கு 250 போலிஸ்காரர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால் இங்கிருக்கும் மாநிலங்களின் நிலையோ கவலைக்கிடமாக இருக்கிறது. தேசிய அளவில் ஒருலட்சம் மக்களுக்கு 143 போலிஸ்காரர்களே இருக்கிறார்கள். பீகாரில் மிகக்குறைவாக 79ஆகவும், ஜார்க்கண்டில் 164 ஆகவும், சத்தீஸ்கரில்134 ஆகவும், உத்தரப்பிரதேசத்தில் 94 ஆகவும் ஒரிசாவில் 100 ஆகவும் இருக்கிறது. அவர்களும் சோர்வடைந் தவர்களாகவும், குறைந்த சம்பளத்துக்கு ஒப்புக்குப் பணியாற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். தொழில் நுட்பத்துடன் கருவிகளைக் கையாளத் தெரியாதவர்களாகவும், வனங்களில், அடர் வனங்களில் அதற்கேற்ப போர்முறையில் செயல்படத் தெரியாதவர்களாகவும் இருக்கின்றனர்.
ஆனால் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கு தயங்குவதே இல்லை. அதிநவீனமாக இருக்கிறார்கள் கடந்த 2005 நவம்பர் 13ம் தேதி ஜெகனாபாத் சிறைச்சாலையை ஆயிரத்துக்கும் அதிகமான மாவோயிஸ்ட்டுகள் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கிருந்த கைதிகளில் 389பேரை விடுவித்தனர். அப்படியே அங்கிருந்த ஆயுதங்களைக் கொள்ளையடித்துக்கொண்டு, மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் அலுவலகங்களையும் வீடுகளையும் சூறையாடிவிட்டுப் போனார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தின் நிர்வாக லட்சணம் அப்போது வெளிப்பட்டது.
2007 மார்ச் 14ஆம் தேதி ராணி போட்லி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 55 போலிஸ்காரர்களையும் சிறப்புக் காவல் படை அதிகாரியையும் போட்டுத்தள்ளிக் கொன்று குவித்ததும் இதே மாவோயிஸ்ட்டுகள்தான். அப்போது அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த மீதி 12 பேர் படுகாயங்களுடன் உயிர்ப் பிழைத்தனர்.
கடந்த ஜூன் மாதத்தில் ஒருநாள். பட்டப்பகலில் பத்தாயிரம் ஆதிவாசி பழங்குடியினர் அவர்களுடன் மற்றவர்களும் சூழநிற்கும்போது, மேஷ்ராம் என்ற 42 வயதுக்காரர் மாவோயிஸ்ட்டு களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஸ்டர் பகுதியிலுள்ள லோஹண்டிகுடாவின் பஞ்சாயத்துத் தலைவர். டாடா நிறுவனம் கட்டத் திட்டமிட்டிருக்கும் உருக்கு ஆலைக்கு இடம் வாங்கித் தரும் தரகராக அவர் செயல்பட்டிருக்கிறார். அதற்காக நிலம் வைத்திருக்கும் ஆதிவாசி பழங்குடியினரிடம் பேசி, கொஞ்சம் நிலத்தையும் பெற்றுத் தந்திருக் கிறார். ஆனால் நிறுவனம் கொடுத்த பணத்தை நிலத்தை விற்ற ஆதிவாசி பழங்குடியினருக்கு சரிவரக் கொடுக்காததால், இந்த சம்பவம் அரங்கேறியது. காவல்துறைக்கு தங்களைப் பற்றிய தகவல் தருகிறார் என்ற சந்தேகம் எழுந்தாலேகூட போதும். போட்டுத் தள்ளிவிட்டுத்தான் மறுவேலை என்பதாக மாவோயிஸ்டுகளின் நடவடிக்கை இருக்கிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சத்தீஸ்கர் மாநிலச் செயலாளர் சித்தரஞ்சன் பக்ஷி சொல்வது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. ஆதிவாசி பழங்குடிகளின் நிலங்களைக் கையகப்படுத்தி ஆயிரத்து 707 பேரை அரசு வெளியேற்றியிருக்கிறது. இடம்பெயர்ந்த அவர்களுக்கு நிலம் விற்றத் தொகையையோ, நஷ்டஈட்டையோ அரசு இதுவரைத் தரவில்லை. ஆனால் கணக்கு காட்டப்பட் டிருக்கிறது. அந்தப்பணம் இடைத்தரகர்களுக்கும் வெளியாட்களுக்குமாக பட்டுவாடா ஆகியிருக் கிறது. உண்மையான மண்ணுக்குச் சொந்தக்காரர்களுக்கு ஒருபைசாகூட கிடைக்கவில்லை. இடத்தைக் கையகப்படுத்தும் முயற்சிகள் இனி அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவிக்கிறார்.


ஆதிவாசி பழங்குடியினருக்கு ஆதரவாகவும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் இருமுரண் களோடு செயல்படும் மாவோயிஸ்ட்டுகளை அழித்தொழிக்கும் திட்டத்தை வெறுமனே சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையைக் கையாள்வதுபோல சிவப்பு அபாயப்பகுதிக்குள் மத்திய அரசு அமல் படுத்தியதே 76 பேரின் சாவுக்கு காரணமாக இருக்க முடியும். அரசாங்கத்தின் நலத்திட்டங்களை ஆதிவாசி பழங்குடியினரிடமும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் கிராமப்புற ஏழை களிடமும் முறையாகக் கொண்டு சேர்த்திருந்தால் அவர்களின் ஆதரவு மாவோயிஸ்ட்டுகளுக்குக் கிடைத்திருக்காது. பிரதமர் 'நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் உள்நாட்டு அபாயம்' என்று பேச வேண்டியும் வந்திருக்காது.
வளம் கொழிக்கும் சுரங்கப் பகுதிகளில் முதலீடு செய்வதற்கான நல்ல சூழ்நிலையை உருவாக்கும் திட்டத்தில், மாவோயிஸ்ட்டுகள் ஒழிப்பு எனும் பெயரில் ஏழை மக்கள் மீது மத்திய அரசு `Opera tion Green Hunt` கூலிப்போரை நடத்துகிறது என்று சாடும் எழுத்தாளரும் சமூக சேவகருமான அருந்ததி ராய், இந்தியாவின் சிவப்பு அபாயப் பகுதியில் நடந்து வரும் வன்முறையைத் தடுக்க அரசுக்கும் இடது சாரி தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடத்தினாலே போதும். பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்கிறார். ஜனநாயக நிறுவனத்தின் மீது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையிழப்பே ஆதிவாசி பழங்குடியின மக்களும் மாவோயிஸ்ட்டுகளும் ஒருவரையொருவர் சார்ந்து செயல்படும் நிலையைத் தந்திருக்கிறது. அதுவேறில்லாமல் 99.9 சதவீத மாவோயிஸ்ட்டுகள் ஆதிவாசிகளாக இருப்பது, அரசியல் நிலைக்கான ஒத்த நிகழ்வாகும் என்றும் குறிப்பிடுகிறார்.
போர் மூலம் அழிவைத்தவிர வேறு எதையும் கொண்டுவந்துவிட முடியாது என்று பல (உள்நாட்டு) போர்களின் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. அவையெல்லாமே உலகத்துக்கு நல்ல பாடங்கள். இந்நிலையில் மத்திய அரசு தனது வியூகங்களை கொள்கை அளவில் பரிசீலனை செய்யத் தயாராகி வருவது தெரிகிறது. அதையே மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், 'நக்ஸல்களுக்கு எதிரான தாக்குதலை தலைமையேற்று தொடர்ந்து நடத்துவேன்' என்று தெரிவித் திருக்கிறார். அணுகுமுறைகளும் யுக்திகளும் மாற இருக்கின்றன. அதன்படி மத்திய ரிசர்வ் காவல் படையை இரண்டாகப் பிரித்து, ஒன்றை சட்டம் - ஒழுங்கு போன்ற மென் நடவடிக்கைகளுக்கும் மற்றதை மாவோயிஸ்ட்டுகள் எதிர்ப்பு, அழிப்புக்கு பயன்படுத்த இருப்பதாகத் தெரிகிறது. அவ்வா றாகப் பிரிக்கப்பட்டுவிட்டால் பாதிக்குமேலான படையினர் எந்த தாக்குதலையும் மேற்கொள்பவர் களாக, குறிப்பாக போர்முறைக்கு தயாராகிவிடுவார்கள் என்கிறார் அரசின் உயரதிகாரி மிஸ்ரா.
எந்த தாக்குதலையும் மேற்கொள்பவர்களாக அனுப்பப்படவுள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் மற்றொரு பிரிவு அடர் வனப்பகுதிகளில் இயங்கும் மாவோயிஸ்ட்டுகளை அழிக்க விமானங்களை பயன்படுத்தும் வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. அரசு அதை ஆலோசித்து வருகிறது. அப்படி செயல்படும்போது நமது அண்டை நாட்டில் நடந்தேறிய பயங்கரத்தை நமது அரசு நினைவில் கொள்ளவேண்டும். ஏனெனில் மாவோயிஸ்ட்டுகள் தங்கள் மீதான தாக்குதலின்போது அப்பாவி ஆதிவாசி பழங்குடியினரைத்தான் வழக்கம்போல கேடயமாக பயன்படுத்துவார்கள்.
அரசின் உயரதிகாரி மிஸ்ரா சொல்லாதபோதும் அதைத்தான் செய்து வந்தது மத்திய ரிசர்வ் காவல் படை. கடந்த 2009 ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பாதுகாப்பு நடவடிக்கை என்றபேரில் 44ஆதிவாசிகளை காவல்படை மோதல் சாவு என்றபெயரில் கொன்று குவித்தது. அதில் 65 வயது முதியவரும் 10 வயது சிறுவனும் அடக்கம். அந்த 44 பேரில் இரண்டே இரண்டுபேர்தான் மாவோயிஸ்ட்டுகள்.
பல ஆண்டுகளாக வனத்துறைக் காவலர்களும், துணை ராணுவப் படைகளும் அப்பாவி ஆதிவாசி களையும் பழங்குடியினரையும்தான் கொன்று குவித்துவருகிறார்கள். அப்படிக் கொல்லப்பட்டவர் களின் எண்ணிக்கை இதுவரைக் கொல்லப்பட்ட ராணுவப்படையினரைக் காட்டிலும் ஆயிரமாயிரம் மடங்கு அதிகம் என்பது கொஞ்சம்கூட யாருக்கும் உறுத்தவில்லை என்பதுதான் பெருஞ்சோகம்.

Labels: P.C Arshiyaas Naxals Chattisgarh home ministery Home minister
arshiyaas[/justify]
arsiyaas
arsiyaas

பதிவுகள் : 3
சேர்ந்தது : 25/03/2012
வசிப்பிடம் : madurai
நான் இருக்கும் நிலை (My Mood) : உற்சாகமாக  இருக்கிறேன்.


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum